பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் 53 ஆம் பிரிவின் கீழ் கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் சிபாரிசுகளை கருத்திற்கொண்டு மற்றும் அமைச்சரவையின் அங்கீகாரத்தின் பிரகாரம் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2026 சனவரி 16 ஆம் திகதிய 2471/52 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(ii) 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் 53 ஆம் பிரிவின் கீழ் கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் சிபாரிசுகளை கருத்திற்கொண்டு மற்றும் அமைச்சரவையின் அங்கீகாரத்தின் பிரகாரம் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2026 சனவரி 16 ஆம் திகதிய 2471/53 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(iii) 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் 53 ஆம் பிரிவின் கீழ் கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் சிபாரிசுகளை கருத்திற்கொண்டு மற்றும் அமைச்சரவையின் அங்கீகாரத்தின் பிரகாரம் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2026 சனவரி 16 ஆம் திகதிய 2471/54 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(iv) 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் 53 ஆம் பிரிவின் கீழ் கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் சிபாரிசுகளை கருத்திற்கொண்டு மற்றும் அமைச்சரவையின் அங்கீகாரத்தின் பிரகாரம் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2026 சனவரி 16 ஆம் திகதிய 2471/55 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(v) 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் 52 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 71 ஆம் பிரிவின் கீழ் கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் கலந்தாலோசனையுடன், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2026 பெப்புருவரி 13 ஆம் திகதிய 2475/28 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(vi) 2021 ஆம் ஆண்டுக்கான நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஆண்டறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேக்கர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கமகெதர திசாநாயக்க
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சரத் குமார - ஐந்து மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ (டாக்டர்) இராமநாதன் அர்ச்சுனா
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முறைகேடு, வெளிப்படைத்தன்மை இல்லாமை மற்றும் ஊடகக் கட்டுப்பாடு
(ii) கௌரவ சஜித் பிரேமதாச
லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கான நிலக்கரி கொள்வனவில் உள்ள சிக்கல்கள்
கௌரவ வலுசக்தி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் தொடர்பாக 2026.02.06ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் சார்பாக தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கௌரவ (கலாநிதி) அனில் ஜயந்த அவர்கள் பதிலளித்தார்.
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
கௌரவ தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் பின்வரும் சட்டமூலங்களை பிரேரித்தார்-
(i) நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் (திருத்தம்) - 2006 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க, நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் சட்டத்தைத் திருத்துவதற்கானது
(ii) பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாய (திருத்தம்) - 2005 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க, பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாயச் சட்டத்தைத் திருத்துவதற்கானது
கௌரவ அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணையை சபை ஏற்றுக் கொண்டது-
கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்களை கட்டாய பௌதீகப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விடுவித்தமை தொடர்பில் ஆராய்ந்து, அறிக்கையிடுவதற்காகவும், அது குறித்த அதன் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்காகவுமான பாராளுமன்ற விசேட குழு
கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்களை கட்டாய பௌதீகப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விடுவித்தமை தொடர்பில் ஆராய்ந்து, அறிக்கையிடுவதற்காகவும், அது குறித்த அதன் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்காகவுமான பாராளுமன்ற விசேட குழுவானது தன்னால் அவதானிக்கப்பட்ட விடயங்களை, 2025 நவம்பர் 19 ஆம் திகதி பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பிரேரணை மூலமாக பணிக்கப்பட்ட கால எல்லைக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு மேலும் காலம் தேவைப்படுவதால் குறிப்பிட்ட விசேடகுழுவிற்கு வழங்கப்பட்ட கால எல்லை, பாராளுமன்ற நிலையியற் கட்டளை 102 இன் பிரகாரம் 2026 யூலை 21 ஆம் திகதி வரை கால நீடிப்பு செய்யப்படுமாக.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 5 ஆம் இலக்க) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) தரைப்படைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(ii) கடற்படைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(iii) வான்படைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(iv) பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம் – வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது (ஆதரவாக 137; எதிராக 27)
(v) அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம்
ஒத்திவைப்புப் பிரேரணை
“2019 ஏப்ரல் 21 இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1816 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஏப்ரல் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks