02

E   |   සි   |  

2026 மார்ச் 17ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல்
2 : பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நிகழ்ச்சித்திட்டம்
3 : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i)    2023 ஆம் ஆண்டுக்கான மொரட்டுவைப்  பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்
(ii)    2024 ஆம் ஆண்டுக்கான மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆண்டறிக்கையும் வருடாந்த கணக்கறிக்கையும்
(iii)    2024 ஆம் ஆண்டுக்கான ஹோட்டல் டெவலப்பர்ஸ் லங்கா லிமிடெட்டின் வருடாந்த அறிக்கை
(iv)    2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை கணக்கீட்டு மற்றும் கணக்காய்வு நியமங்கள் கண்காணிப்புச் சபையின் ஆண்டறிக்கை
(v)    (357 ஆம் அத்தியாயமான) தரைப்படைச் சட்டத்தின் 29 ஆம் மற்றும் 155 ஆம் பிரிவுகளின் கீழ் பாதுகாப்பு அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2025 பெப்புருவரி 15 ஆம் திகதிய 2423/34 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(vi)    (358 ஆம் அத்தியாயமான) கடற்படைச் சட்டத்தின் 161 ஆம் பிரிவின் கீழ் பாதுகாப்பு அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2025 பெப்புருவரி 15 ஆம் திகதிய 2423/35 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(vii)    (359 ஆம் அத்தியாயமான) வான்படைச் சட்டத்தின் 29 ஆம் மற்றும் 155 ஆம் பிரிவுகளின் கீழ் பாதுகாப்பு அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2025 பெப்புருவரி 15 ஆம் திகதிய 2423/36 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(viii)    2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் பிரிவு 7(1)இ மற்றும் பகுதி VI என்பவற்றுடன் சேர்த்து வாசிக்கப்படும் 105 ஆம் பிரிவின் கீழ் ஏற்றுமதிப் பெறுகைகளை இலங்கைக்குத் திருப்பியனுப்புதல் விதிகள்  தொடர்பாக ஆளும் சபையின் தலைவரும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரால் ஆக்கப்பட்டு, 2026 சனவரி 30 ஆம் திகதிய 2473/30 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட விதிகள்
(ix)    2023 ஆம் ஆண்டுக்கான அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாணக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை
(x)    2021 ஆம் ஆண்டுக்கான மில்கோ (தனி) நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை
(xi)    2022 ஆம் ஆண்டுக்கான தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபையின் வருடாந்த அறிக்கை
(xii)    2024 ஆம் ஆண்டுக்கான நில அளவைச் சபையின் வருடாந்த அறிக்கை
(xiii)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கொழும்பு மாநகர சபை தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xiv)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் சபரகமுவ மாகாண சபையின் கீழுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xv)    2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் ஆண்டறிக்கை.
(xvi)    2013 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க, விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் 3 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படுவதாகிய 34 ஆம் பிரிவின் கீழ் தடைசெய்யப்பட்ட பொருட்களின் பட்டியல்-2026 தொடர்பாக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2026 சனவரி 16 ஆம் திகதிய 2471/51 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xvii)    2023 ஆம் ஆண்டுக்கான தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் ஆண்டறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ                   
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அசோக குணசேன          
(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி - நான்கு மனுக்கள்                    
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i)    கௌரவ சஜித் பிரேமதாச
உலகில் போர்ச் சூழல் நிலவும் வேளையில், எரிபொருள் விநியோகம் தொடர்வதை உறுதி செய்வதற்கான அரசாங்க நடவடிக்கைகள்

கௌரவ வலுசக்தி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.

(ii)    கௌரவ ரவி கருணாநாயக்க
கிரிப்டோ நாணயங்களின் மற்றும் பிற டிஜிட்டல் சொத்துக்களின் ஒழுங்குபடுத்தல்


சட்டமூலங்கள் சமர்ப்பணம் 
கௌரவ பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் பின்வரும் சட்டமூலங்களை பிரேரித்தார்-
(i)    உண்ணாட்டரசிறை (திருத்தம்) - 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறைச் சட்டத்தைத் திருத்துவதற்கானது
(ii)    சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தம்) - 2022 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க, சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீட்டுச் சட்டத்தைத் திருத்துவதற்கானது

(iii)    தனியாட்கள் மற்றும் கம்பெனிகளின் மீட்பு, புனர்வாழ்வு, மற்றும் கடனிறுக்கவகையின்மை ஆகியவற்றுடன் தொடர்புடைய சட்டங்களைத் திருத்துவதற்கும், தொகுப்பதற்கும்; (97 ஆம் அத்தியாயமான) கடனிறுக்கவகையின்மை கட்டளைச் சட்டத்தினை நீக்குவதற்கும்; 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க, கம்பெனிகள் சட்டத்தினைத் திருத்துவதற்கும்; 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறைச் சட்டத்தைத் திருத்துவதற்கும்; 1988 ஆம் ஆண்டின் 72 ஆம் இலக்க, மத்தியஸ்த சபைகள் சட்டத்தைத் திருத்துவதற்கும் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநோ்விளைவான எல்லாக் கருமங்களுக்கும் ஏற்பாடு செய்வதற்காக
“மீட்பு, புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்கவகையின்மை (கூட்டிணைப்பு மற்றும் தனிப்பட்ட)”
எனும் சட்டமூலத்தினை கௌரவ நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் வேதனம் மற்றும் சேவை நிபந்தனைகளை தீர்மானித்தல் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயம்)

சபையினால் அங்கீகரிக்கப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆரச்சி அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1738 மணியளவில் பாராளுமன்றமானது 2026 மார்ச் 19ஆம் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. 


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks