03

E   |   සි   |  

2025 டிசம்பர் 18ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 16 இன் பிரகாரம் கௌரவ பிரதம அமைச்சர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாராளுமன்ற கூட்டமொன்றைக் கூட்டுவதற்கான அறிவித்தலை பாராளுமன்றச் செயலாளர் நாயகம்  வாசித்தார்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்
2 : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல்
3 : கௌரவ சதுரங்க அபேசிங்ஹ, பா.உ. அவர்களினது சிறப்புரிமை மீறப்பட்டதாக கேள்வி எழுப்பிய விடயம்
4 : அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்களில் சேவையாற்றவுள்ள உறுப்பினர்கள்
5 : வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் சேவையாற்றவுள்ள உறுப்பினர்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
(i)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 41எ (1) உறுப்புரையின் கீழ் சமர்ப்பிக்கப்படும் அரசியலமைப்புப் பேரவையின் ஐந்தாவது அறிக்கை 
(ii)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் —
•    2018 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் மூன்றாவது தொகுதியின் XXI (21)  ஆம் பகுதியையும்; 
•    2021 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் மூன்றாவது தொகுதியின் XXIII (23)  ஆம் பகுதியையும்; 
•    2022 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LXVIII (68) ஆம் பகுதியையும்; 
•    2023 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் XXIX (29) ஆம் பகுதியையும்; மற்றும் 
•    2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXXIV (34) மற்றும் XXXV (35) ஆம் பகுதிகளையும், மூன்றாவது தொகுதியின் XXIII (23) மற்றும் XXIV (24) ஆம் பகுதிகளையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XXI (21) மற்றும் XXII (22) ஆம் பகுதிகள்
(iii)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் —
•    2023 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் நான்காவது தொகுதியின் XXV (25) ஆம் பகுதியையும்; மற்றும் 
•    2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் XXVII (27), XXVIII (28), XXIX (29), XXX (30), XXXI (31) மற்றும் XXXII (32) ஆம் பகுதிகளையும், நான்காவது தொகுதியின் XIV (14), XV (15), XVI (16), XVII (17) மற்றும் XVIII (18) ஆம் பகுதிகளையும், ஐந்தாவது தொகுதியின்  IV (4), V (5), VI (6) மற்றும் VII (7) ஆம் பகுதிகளையும் மற்றும் ஆறாவது தொகுதியின் XVIII (18), XIX (19), XX (20), XXI (21), XXII (22), XXIII (23) மற்றும் XXIV (24) ஆம் பகுதிகள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i)    2026 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு மற்றும் 2024 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க பொது நிதிசார் முகாமைத்துவச் சட்டத்தின் 16(4) (அ), (ஆ), (இ) மற்றும் (ஈ) பிரிவுகளின் கீழான ஆவணம்
(ii)    2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான தேசிய கல்வி நிறுவகத்தின் ஆண்டறிக்கைகள்
(iii)    2023 ஆம் ஆண்டுக்கான அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
(iv)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இலங்கை சுங்கம் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(v)    (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் 151 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 237 ஆம் பிரிவின் கீழ் அப்போதைய போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2025 செத்தெம்பர் 04 ஆம் திகதிய 2452/40 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(vi)    (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் 237 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 141, 143, 144, 157அ, 168 மற்றும் 190 ஆம் பிரிவுகளின் கீழ் அப்போதைய போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2025 செத்தெம்பர் 25 ஆம் திகதிய 2455/29 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(vii)    2023 ஆம் ஆண்டுக்கான தேசிய வடிவமைப்பு நிலையத்தின் வருடாந்த அறிக்கை
(viii)    2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
(ix)    1996 ஆம்  ஆண்டின் 2 ஆம் இலக்க, கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் 61 ஆம் பிரிவின் கீழ், அப்போதைய கடற்றொழில் அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2024 பெப்புருவரி 15 ஆம் திகதிய 2371/35 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(x)    1990 ஆம்  ஆண்டின் 23 ஆம் இலக்க, கடற்றொழிலாளர் ஓய்வூதிய, சமூகப் பாதுகாப்பு நலன்புரித் திட்டச் சட்டத்தின் 29 ஆம் பிரிவின் கீழ் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள்   அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2025 மாச்சு 19 ஆம் திகதிய 2428/13 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xi)    (129 ஆம் அத்தியாயமான) கடை, அலுவலக ஊழியர் (ஊழியத்தையும் வேதனத்தையும் ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் 66 ஆம் பிரிவின் கீழ் தொழில் அமைச்சரினால்  2025  டிசெம்பர் 12 ஆம் திகதி ஆக்கப்பட்ட ஒழுங்குவிதி
(xii)    2024 ஆம் ஆண்டின் அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை.
(xiii)    2024 ஆம் ஆண்டுக்கான கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமை திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழுவின் ஏழு அறிக்கைகள் அக்குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) நிஷாந்த சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த பெரேரா                   
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷண எகொட வித்தான 
 (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ ரவி கருணாநாயக்க
வணிக மற்றும் வணிகம் சாரா கடன்களின் விபரங்கள் மற்றும் சிக்கல்கள்


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
சுற்றுலாத் துறையிலுள்ள சிக்கல்கள் தொடர்பாக 2025.06.04 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ திலித் ஜயவீர அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் கௌரவ விஜித ஹேரத் அவர்கள் பதிலளித்தார்.

சட்டமூலங்கள் சமர்ப்பணம் 
கௌரவ நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் பின்வரும் சட்டமூலங்களை பிரேரித்தார்-
(i)    நீதித்துறை (திருத்தம்) - 1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, நீதித்துறைச் சட்டத்தைத் திருத்துவதற்கானது
(ii)    நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தம்) - (218 ஆம் அத்தியாயமான) நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் கட்டளைச்சட்டத்தைத் திருத்துவதற்கானது


ஒத்திவைப்புப் பிரேரணை
“சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட பேரழிவுக்குப் பிறகு நாட்டின் தற்போதைய நிலைமை” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மஞ்ஜுள சுரவீர ஆரச்சி அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றமானது 2025 டிசம்பர் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks