E   |   සි   |  

2025 ஆகஸ்ட் 19ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

1 : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல்
2 : "மத்தியஸ்தம் (குடியியல் மற்றும் வர்த்தகப் பிணக்குகள்)" எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்மானம்
3 : “சனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதியொன்று கிடைக்கப் பெறல்
4 : பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பானது
5 : தேசிய இளைஞர் சங்க அங்கத்தவர்களுக்காக இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் விசேட நிகழ்ச்சித்திட்டம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2023/2024 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் ஆண்டறிக்கை.
(ii)    2024 ஆம் ஆண்டுக்கான நிருவாகத்துக்கான பாராளுமன்ற ஆணையாளர் அலுவலகத்தின் (ஒம்புட்ஸ்மன்) வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
(iii)    தேசிய அரசுப் பேரவையின் 1974 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க மற்றும் 1988 ஆம் ஆண்டின் 83 ஆம் இலக்க சுங்க (திருத்தச்) சட்டத்தினால் திருத்தப்பட்டவாறான (235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 19(அ) ஆம் பிரிவின் கீழ் சுங்க இறக்குமதித் தீர்வை தொடர்பில்  நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2025 யூலை 09 ஆம் திகதிய 2444/23 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(iv)    2024 ஆம் ஆண்டுக்கான இலங்கைப் பாராளுமன்றத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
(v)    2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை திரிபோஷ லிமிடெட்டின் வருடாந்த அறிக்கை.
(vi)    2022 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட குருநாகல் பெருந்தோட்ட கம்பனியின் ஆண்டறிக்கை.
(vii)    2024 ஆம் ஆண்டுக்கான இறப்பர் அபிவிருத்தித் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை.
(viii)    2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் ஆண்டறிக்கை.
(ix)    2024 ஆம் ஆண்டுக்கான சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை.


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுனில் குமார கமகே அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஹெக்டர் அப்புஹாமி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii)    அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தற்காலிகத் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க                    
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நாமல் கருணாரத்ன                    
(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரத்ன கமகே - இரண்டு மனுக்கள் 
(iv)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நலின் ஹேவகே - மூன்று மனுக்கள் 
(v)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர -இரண்டு மனுக்கள் 
(vi)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சீ. அலவத்துவல                    
(vii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) (செல்வி) கெளஷல்யா ஆரியரத்ன 
(viii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுதத் பலகல்ல                    
(ix)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுனில் பியன்வில                    
(x)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுனில் றாஜபக்ஷ
 (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ (டாக்டர்) இராமநாதன் அர்ச்சுனா

தெல்லிப்பளை மருத்துவமனையில் நிகழும் முறைகேடுகள்


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

2025 ஆண்டுக்கான சர்வதேச இளைஞர் தினம் தொடர்பான கூற்றொன்றினை இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ சுனில் குமார கமகே அவர்கள் முன்வைத்தார்.


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

(i)    தேசியக் கட்டிட ஆராய்ச்சி நிறுவகத்தைத் தாபிப்பதற்கும் அத்துடன் அதனோடு தொடர்புபட்ட அல்லது அதன் இடை நோ்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்காக

“தேசியக் கட்டிட ஆராய்ச்சி நிறுவகம்”

எனும் சட்டமூலத்தினை கௌரவ பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.

(ii) 19 ஆம் அத்தியாயமான) தண்டனைச் சட்டக்கோவையைத் திருத்துவதற்காக

“தண்டனைச் சட்டக்கோவை (திருத்தம்)”

எனும் சட்டமூலத்தினை கௌரவ நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்அவர்கள் பிரேரித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 3 வரையான) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன.:-
(i)    பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டமூலம் – திருத்தங்களுடன்
(ii)    பொதுத் தனிசு முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(iii)    வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் கட்டளை


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“இளைஞர்களினால் நாட்டுக்கான செயல் பங்களிப்பு தொடர்பான நிகழ்ச்சித்திட்டம்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ்க ரங்கனாத் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1746 மணியளவில் பாராளுமன்றமானது 2025 ஆகஸ்ட் 20ஆம் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks