E   |   සි   |  

2025 ஆகஸ்ட் 07ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

1 : தவிசாளர் ஒருவரைத் தெரிவுசெய்வதற்காக அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் கூட்டம்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

(i)    2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 34 ஆம் பிரிவின் பிரகாரம், தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்டு, நிதி எனும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரின் அவதானிப்புகளுடன் சமர்ப்பிக்கப்பட்ட தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான பாதீட்டு மதிப்பீடு
(ii)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் IV ஆம் பகுதி


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2024 ஆம் ஆண்டுக்கான தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
(ii)    2023 ஆம் ஆண்டுக்கான குற்றத்தால் பலியானவர்களையும் மற்றும் சாட்சியாளர்களையும் பாதுகாப்பதற்கான தேசிய அதிகார சபையின் வருடாந்த அறிக்கை.
(iii)    அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தேசிய மிருகக்காட்சிச் சாலைத் திணைக்களம் பற்றிய விடயம் தொடர்பில் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை.


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான பொது மனுக்கள் பற்றிய குழுவின் முதலாவது அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.எம். காமிணி ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ (கலாநிதி) வீ.எஸ். இராதாகிருஷ்ணன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கே.வி. சமந்த வித்யாரத்ன  - மூன்று மனுக்கள் 
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ஜயசிங்ஹ                    
(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) ஹங்சக விஜேமுணி                    
(iv)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) நிஹால் அபேசிங்ஹ                    
(v)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி 
(vi)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பத்மசிரி பண்டார - இரண்டு மனுக்கள் 
(vii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) நிஷாந்த சமரவீர                    
(viii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மட் பைசல்
 (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

(i)    கௌரவ சஜித் பிரேமதாச

வாகன இறக்குமதிக்கான வரி நடைமுறை

(ii) கௌரவ (டாக்டர்) இராமநாதன் அர்ச்சுனா

கம்பஹா விக்கிரமாராச்சி ஆயுர்வேத வித்தியாலயத்தில் உள்ள பிரச்சினைகள்


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

(i)    அரச பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியாகும் பட்டாதிரிகளுக்கான வேலைவாய்ப்ப்பு தொடர்பாக 2025.07.11 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் போது கௌரவ (டாக்டர்) இராமநாதன் அர்ச்சுனா அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் கௌரவ கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் பதிலளித்தார்.
(ii)    சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தொடர்பாக 2025.02.28 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் போது கௌரவ சிவஞானம் ஸ்ரீதரன் அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் கௌரவ சட்டத்தரணி ஹர்ஷன நானாயக்கார அவர்கள் பதிலளித்தார்.


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

1986 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க, சனாதிபதிகளின் உரித்துரிமைகள் சட்டத்தினை நீக்குவதற்காக

“சனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்)”

எனும் சட்டமூலத்தினை கௌரவ நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

நாணய மாற்றுண்டியல்கள் (திருத்தச்) சட்டமூலம் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயம்)

சபையினால் அங்கீகரிக்கப்பட்டன.


ஒத்திவைப்புப் பிரேரணை

“நாட்டின் தற்போதைய பொருளாதாரம்” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிரி பஸ்நாயக்க அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து,  மணியளவில் பாராளுமன்றமானது 2025 ஆகஸ்ட் 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks