E   |   සි   |  

2025 ஆகஸ்ட் 06ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

1 : "தேசிய கணக்காய்வு(திருத்தம்)" எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்மானம்
2 : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கையின் மூன்றாவது தொகுதியின் I ஆம் பகுதி


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2023 ஆம் ஆண்டுக்கான கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆண்டறிக்கை.
(ii)    அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகாரசபை பற்றிய விடயம் தொடர்பில் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 120(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை.
(iii)    2024 ஆம் ஆண்டுக்கான உணவு ஆணையாளர் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை.
(iv)    2023 ஆம் ஆண்டுக்கான தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வருடாந்த அறிக்கை.
(v)    அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் புத்தசாசனம், சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு பற்றிய விடயம் தொடர்பில் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை.


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ விஜேசிரி பஸ்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கே. சுஜித் சஞ்ஜய பெரேரா - இரண்டு மனுக்கள் 
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அர்கம் இல்யாஸ்                    
(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜந்த கம்மெத்தெகே                    
(iv)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரீ.கே. ஜயசுந்தர                    
(v)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நந்தன பத்மகுமார  - மூன்று மனுக்கள் 
(vi)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஸ்டெபனி பிரனாந்து                    
(vii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிரி பஸ்நாயக்க                    
(viii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) நந்தன மில்லகல
 (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் கேள்விகள்

(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நந்தன பத்மகுமார  
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷண எகொட வித்தான  
(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி
(iv)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தான்


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

(i)    கௌரவ ரவி கருணாநாயக்க

குத்தகை நிறுவனங்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துதல்

(ii)    கௌரவ சிவஞானம் சிறீதரன்

நகர அபிவிருத்திப் பகுதிகளாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டதன் காரணமாக யாழ்ப்பாணத்தில் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள்


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

வெளிநாட்டு நேரடி முதலீடு, உச்ச செயற்கைக்கோள் விபரங்கள் போன்றவை தொடர்பாக 2025.07.09 அன்று பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் கேள்விகளின் கீழ் கௌரவ டி.வீ. சானக அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் கௌரவ கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் பதிலளித்தார்.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ கே. காதர் மஸ்தான் அவர்களுக்கு “இலங்கை வசதிகள் முகாமைத்துவ நிறுவக (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 3 ஆம் இலக்க) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i)    இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் - திருத்தங்களுடன் – இரண்டாம் மதிப்பீட்டின் போது வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது (ஆதரவாக 121; எதிராக 25)
(ii)    புகையிலை வரிச் சட்டத்தின் கீழ் கட்டளை
(iii)    தேயிலை (வரி மற்றும் ஏற்றுமதிக்கான  கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்


ஒத்திவைப்பு நேரத்தின் போதான  கேள்விகள்

(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர 
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் உபுல் கித்சிரி  


அதனையடுத்து, 1801 மணியளவில் பாராளுமன்றமானது 2025 ஆகஸ்ட் 07ஆம் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. 


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks