பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சனாதிபதியின் செய்திகள்
1 : பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்)
சபாநாயகரின் அறிவித்தல்கள்
2 : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்
3 : “மத்தியஸ்தம் (குடியியல் மற்றும் வர்த்தகப் பிணக்குகள்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதியொன்று கிடைக்கப் பெறல்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் ─
• 2020 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் XLV ஆம் பகுதியையும்; மற்றும்
• 2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் III மற்றும் IV ஆம் பகுதிகளையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் I ஆம் பகுதி
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) (235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழ் இறக்குமதித் தீர்வைகள் தொடர்பான தீர்மானம்.
(ii) (2025 ஏப்ரல் 28 ஆம் திகதிய 2434/02 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை)
(iii) திருத்தப்பட்டவாறான, 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க உற்பத்தித் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் உற்பத்தித் தீர்வை தொடர்பில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2025 ஏப்ரல் 28 ஆம் திகதிய 2434/04 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(iv) 2018 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 51 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 19 ஆம் பிரிவின் கீழ் மோட்டார் வாகனங்கள் மீதான சொகுசு வரி தொடர்பில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2025 ஏப்ரல் 28 ஆம் திகதிய 2434/05 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதி.
(v) 1988 ஆம் ஆண்டின் 83 ஆம் இலக்கச் சட்டத்தில் திருத்தப்பட்டவாறான சுங்கக் கட்டளைச் சட்டத்தின் (235 ஆம் அத்தியாயமான) 10அ ஆம் பிரிவின் கீழ் இறக்குமதிப் பொருட்கள் மீதான தீர்வைக் கட்டணம் தொடர்பில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2025 ஏப்ரல் 28 ஆம் திகதிய 2434/03 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(vi) 2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்.
(vii) 2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை.
(viii) 2023 ஆம் ஆண்டுக்கான கம்பஹா விக்ரமாராச்சி சுதேச மருத்துவப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்.
(ix) 2023 ஆம் ஆண்டுக்கான கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் ஆண்டறிக்கை.
(x) 2024 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
(xi) 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய பெறுகை ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை.
(xii) 2024 ஆம் ஆண்டுக்கான எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
(xiii) 2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் வருடாந்த அறிக்கை.
(xiv) 2014 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க, நிர்மாணத்தொழில் அபிவிருத்திச் சட்டத்தின் 52(2) ஆம் பிரிவு மற்றும் 35(1), (2) மற்றும் (4) ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 58 ஆம் பிரிவின் கீழ் நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2025 ஏப்ரல் 01 ஆம் திகதிய 2430/13 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.
(xv) 2024 ஆம் ஆண்டுக்கான சட்ட ஆணைக்குழுத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை.
(xvi) 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய மிருகக் காட்சிச்சாலைத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
(xvii) 2024 ஆம் ஆண்டுக்கான வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை.
(xviii) 2024 ஆம் ஆண்டுக்கான நன்னடத்தை, சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா - இரண்டு மனுக்கள்
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) (செல்வி) கெளஷல்யா ஆரியரத்ன
(iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சித்ரால் பெர்னாந்து
(iv) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அமில பிரசாத்
(v) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷண எகொட வித்தான - நான்கு மனுக்கள்
(vi) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (செல்வி) அம்பிகா சாமிவெல்
(vii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆரச்சி
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ சஜித் பிரேமதாச
இளைஞர் மன்றங்களை மீண்டும் நிறுவுதல் மற்றும் மறுசீரமைப்பதில் அரசியல் தலையீடு
கௌரவ இளைஞர் விவகாரங்கள் பிரதி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.
(ii) கௌரவ திலித் ஜயவீர
கொள்கலன் விடுவிப்பு குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை அறிக்கை
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
(i) பெல்வத்த மற்றும் செவனகல சீனித் தொழிற்சாலைகளில் உள்ள பிரச்சினைகள் தொடர்பான கூற்றொன்றினை கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி அவர்கள் முன்வைத்தார்.
(ii) யாழ்ப்பாண விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக 2025.07.09 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சிவஞானம் சிறீதரன் அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் கௌரவ வசந்த சமரசிங்க அவர்கள் பதிலளித்தார்.
(iii) கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்டப்படிப்புக்கான சிவில் மாணவர் சேர்க்கையினை இடைநிறுத்தல் தொடர்பாக 2025.06.17அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு பாதுகாப்பு அமைச்சர் சார்பாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் கௌரவ மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகர அவர்கள் பதிலளித்தார்.
சிறப்புரிமைக் கேள்விகள்
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான
கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ அவர்களால் தனக்கு எதிரான பொய்யான குற்றச்சாட்டு
சிறப்புரிமைகள்
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (டாக்டர்) இராமநாதன் அர்ச்சுனா அவர்கள் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக 2025 மே 09 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய விடயம், கௌரவ எதிர்க்கட்சி முதற்கோலாசான் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 118 ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 3 ஆம் இலக்க) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) 2002 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க, அலுவலர்களை அகற்றுதல் (நடவடிக்கைமுறை) சட்டத்தின் 17 ஆம் பிரிவின் பிரகாரம் பொலிசுப் பரிசோதகர் தலைமையதிபதி திரு. ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னகோன் அவர்களை பொலிசுப் பரிசோதகர் தலைமையதிபதி பதவியிலிருந்து அகற்றுவதற்கான தீர்மானம் - வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது (ஆதரவாக 177; எதிராக 0; தவிர்ந்து கொண்டோர் 1)
(ii) மிகைப்பொருள் திணிப்பெதிர்ப்பு மற்றும் எதிரீட்டுத்தீர்வைகள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(iii) நீதித்துறைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“கோறளைப்பற்று மத்திய பிரதேச செயலகத்தின் கிராம சேவகர் பிரிவு தொடர்பான வர்த்தமானி” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1800 மணியளவில் பாராளுமன்றமானது 2025 ஆகஸ்ட் 06ஆம் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks