E   |   සි   |  

சபை அலுவல்கள்


கெளரவ விஜித ஹேரத் அவர்களுக்கு "பஹலகம சிறீ சோமரத்தன நாஹிமி தேரர் மன்றத்தைக் (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 6 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டன.

(i) இறக்குமதி ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச் ) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள்
(ii) புகையிலை வரிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(iii) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழான விதிகள்
(iv) உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை
(v) விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான இரண்டு கட்டளைகள்



ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"இஸ்ரேல் படையினரால் தாக்குதலுக்குள்ளான பலஸ்தீனுக்கான உதவிக்கப்பல்" பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதனையடுத்து, 1625 மணியளவில் பாராளுமன்றமானது 2010 ஜூன் 10 ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks