E   |   සි   |  

சபை அலுவல்கள்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

அரசியலமைப்பின் 150 ஆவது உறுப்புரையின் (2) ஆம் பந்தியின் கீழ் தீர்மானம் (கணக்கு வாக்குப்பணம் 2010)

சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு (சார்பாக 125, எதிராக 78) பிரேரணை சபையால் நிறைவேற்றப்பட்டது.


மேலும் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2, 3 ஆம் மற்றும் 4ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்களும் சபையால் நிறைவேற்றப்பட்டன.

(i) குறைநிரப்பும் தொகை - தலைப்பு 249 - நிகழ்ச்சித்திட்டம் 01 (நிதி, திட்டமிடல் அமைச்சு)
(ii) உள்நாட்டு இறைவவரிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதி
(iii) உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை



ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"சுகாதாரத் துறையில் நிலவுகின்ற பிரச்சினைகள்" எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ தயாசிறி ஜயசேகர அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1815 மணியளவில் பாராளுமன்றமானது 2009 நவம்பர் 06 ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks