E   |   සි   |  

சபை அலுவல்கள்


கெளரவ லலித் திசாநாயக்க அவர்களுக்கு "இலங்கைக் கணக்கீட்டுத் தொழில்நுட்பவியலர் கழகம் (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் மற்றும் 2 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டன. (ii) ஆம் இலக்க விடயம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

(i) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
(ii) பாராளுமன்ற தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.



ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"ஓய்வூதிய முறைகேட்டை தீர்ப்பதற்கான வழிமுறைகள்" எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ ஆர்.எம். பத்ம உதயசாந்த குணசேகர அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1630 மணியளவில் பாராளுமன்றமானது 2009 செப்டெம்பர் 25 ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks