பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2019 ஆம் ஆண்டுக்கான தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் ஆண்டறிக்கை
(ii) 2017 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட சீநோர் நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை
(iii) 2018 ஆம் ஆண்டுக்கான அரச ஈட்டு மற்றும் முதலீட்டு வங்கியின் வருடாந்த அறிக்கை
(iv) 2020 ஆம் ஆண்டுக்கான நெல் மற்றும் தானியவகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழவகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாட்டு விதை உற்பத்தி மற்றும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை இராஜாங்க அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(v) 2019 ஆம் ஆண்டுக்கான இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் வருடாந்த அறிக்கை
(vi) 2019 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட விமான நிலைய மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார் ) கம்பனியின் வருடாந்த அறிக்கை
(vii) 2019/2020 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸின் ஆண்டறிக்கை
(viii) 2017 ஆம் ஆண்டுக்கான புனர்வாழ்வு அதிகாரசபையின் வருடாந்த அறிக்கையும் நிதிக்கூற்றும்
(ix) 1996 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலம் திருத்தப்பட்டவாறான 1991 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க, இலங்கைத் தொலைத்தொடர்புகள் சட்டத்தின் 5(ஊ) ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 71(2)(அ) ஆம் பிரிவின் கீழ், இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் சனாதிபதியினால் ஆக்கப்பட்டு, 2019 ஆகஸ்ட் 02 ஆம் திகதிய 2134/56 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(x) 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் 4(1), 6 மற்றும் 14 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ், நிதி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2021 ஒக்டோபர் 12 ஆம் திகதிய 2249/10 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xi) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கமத்தொழில் அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
வனசீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ சீ.பீ. ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ கயந்த கருணாதிலக்க
(ii) கௌரவ வீரசுமன வீரசிங்க
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ சஜித் பிரேமதாச
உரப் பிரச்சினைகள் மற்றும் விவசாய மற்றும் பெருந்தோட்டத் துறைப் பிரச்சினைகள்
மேற்சொன்ன வினாவிற்கு கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே அவர்கள் பதிலளித்தார்.
(ii) கௌரவ அநுர திசாநாயக்க
உதவிப் பொலிஸ் கண்காணிப்பாளர் (ASP) ஆட்சேர்ப்பு தேர்வில் முறைகேடுகள்
மேற்சொன்ன வினாவிற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் (கலாநிதி) சரத் வீரசேக்கர அவர்கள் பதிலளித்தார்.
சிறப்புரிமைக் கேள்விகள்
கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்
தான் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநரின் அறிக்கை
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
(i) கெளரவ ஜே.சீ. அலவத்துவல அவர்களுக்கு “ஹெக்டர் அப்புஹாமி ஹெல்பிங் ஹேண்ட் அறக்கட்டளை மன்றத்தைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்” இனை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
(ii) கெளரவ புத்திக பத்திறண அவர்களுக்கு “கிழக்கு மீளெழுச்சி அமைப்பைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்” இனை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
ஒத்திவைப்புப் பிரேரணை
“அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் 2021 ஜூலை 20, ஒக்டோபர் 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மூன்று அறிக்கைக” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ (பேராசிரியர்) திஸ்ஸ விதாரண அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2021 நவம்பர் 10ஆந் திகதி புதன்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks