பார்க்க

E   |   සි   |  

2021 ஜூலை 20ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’: நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்மொழியப்பட்ட திருத்தம் தொடர்பான தீர்ப்பு


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2019 ஆம் ஆண்டுக்கான கட்டிடத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ii)    2020 ஆம் ஆண்டுகளுக்கான கம்பஹா மாவட்ட செயலகத்தின் செயலாற்றுகை மற்றும் கணக்குகள்  அறிக்கை
(iii)    2020 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(iv)    2020 ஆம் ஆண்டுக்கான நீர்ப்பாசன அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(v)    2020 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றத்தின் அரசாங்கக்கட்சி முதற்கோலசான் அலுவலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(vi)    2020 ஆம் ஆண்டுக்கான சமூக சேவைகள் திணைக்களத்தின்  செயலாற்றுகை அறிக்கை
(vii)    2018 ஆம் ஆண்டுக்கான பொல்கொல்ல தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(viii)    2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளுக்காக இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபையின் வருடாந்த அறிக்கைகள்
(ix)    2019 ஆம் ஆண்டுக்காக இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபையின் வருடாந்த அறிக்கையும் கணக்கு அறிக்கையும்
(x)    2018 ஆம் ஆண்டுக்கான மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஆண்டறிக்கை
(xi)    2020 ஆம் ஆண்டுக்கான கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் வழங்கல் கருத்திட்டங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறக்கை
(xii)    2018 ஆம் ஆண்டுக்கான தேயிலை சிறுபற்றுநிலங்கள் அபிவிருத்தி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை
(xiii)    2020 ஆம் ஆண்டுக்கான சட்ட வரைஞர் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை

(xiv)    அரசாங்க பொறுப்பு முயற்சிகள் குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட  அறிக்கையில் மின்சக்தி அமைச்சின் இலங்கை நிலக்கரி தனியார் நிறுவனம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட  விடயங்கள் தொடர்பான 120(4) ஆம்  பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xv)    2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதிசேர் வரிச் சட்டத்தின் 75 ஆம் பிரிவின் கீழ் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2021  ஒக்டோபர் 26 ஆம் திகதிய 2042/21 ஆம் இலக்க வர்த்தமானப் பத்திரிகை திருத்தப்பட்டு  2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதிசேர் வரிச் சட்டத்தின் 75 ஆம் பிரிவின் கீழ் 2021  மே 20 ஆம் திகதிய 2228/33 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் முதலாவது அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (பேராசிரியர்) திஸ்ஸ விதாரண அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

கௌரவ துமிந்த திசாநாயக்க

(மனு பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ சஜித் பிரேமதாச

2021 ஆம் ஆண்டிற்கான க.பொ.த. உயர்தரம் மற்றும் தரம் 5 தேர்வுகள்

மேற்சொன்ன வினாவிற்கு கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சர் கௌரவ சுசில் பிரேமஜயந்த அவர்கள் பதிலளித்தார்.


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

குறித்தசில சட்டங்களின் கீழ் வெளிப்படுத்துவதற்குத் தேவைப்படுத்தப்பட்ட வெளிப்படுத்தப்படாத வரிவிதிக்கப்படற்பாலதான வழங்குகைகளையும் வருமானத்தையும் சொத்துக்களையும் தன்னிச்சையாக வெளிப்படுத்துவதற்கு ஆட்களை இயலச்செய்வதற்கும்; அவ்வாறு வெளிப்படுத்தப்பட்ட வரிவிதிக்கப்படற்பாலதான வழங்குகைகளின் மீது, வருமானத்தின் மீது மற்றும் சொத்துக்களின் மீது வரியொன்றை விதிப்பதற்காக ஏற்பாடு செய்வதற்கும்; அத்தகைய ஏதேனும் வரி விதிக்கப்படற்பாலதான வழங்குகையை, வருமானத்தை அல்லது சொத்தைத் தன்னிச்சையாக வெளிப்படுத்தும் ஆட்களுக்கும் குறித்துரைக்கப்பட்ட சட்டங்களின் கீழான புலனாய்வு, குற்றவழக்கு மற்றும் தண்டங்களிலிருந்தான பொறுப்புக்கெதிராக நட்டோத்தரவாதமளிப்பறதற்கும்; குறித்துரைக்கப்பட்ட சட்டங்களின் கீழ் வரிவிதிக்கப்படற்பாலதான வழங்குகளையும் வருமானத்தையும் சொத்துக்களையும் ஏலவே வெளிப்படுத்தியிருந்த ஆட்களுக்குக் குறித்தசில சலுகைகளை வழங்குவதற்கும்; அத்துடன் அவற்றோடு தொடர்புபட்டவையும் அவற்றின் இடைநோ்விளைவானவையுமான கருமங்களுக்குமாக

“நிதி”

எனும் சட்டமூலத்தினை கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்கள் பிரேரித்தார்.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ பாட்டளி சம்பிக ரணவக்க அவர்களுக்கு “நீதிமன்றங்களை அவமதிப்புச் செய்தல் சட்டமூலம்” இனை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

வலுசக்தி அமைச்சர் கௌரவ உதய கம்மன்பில அவர்கள் மீது நம்பிக்கையின்மை

பெயர்மூல வாக்கெடுப்பிற்கு விடப்பட்டதன் (ஆதரவாக 61; எதிராக 152) பின்னர் நிராகரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1755 மணியளவில் பாராளுமன்றமானது 2021 ஆகஸ்ட் 03ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks