பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
A: அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்
B: நிலையியற் கட்டளை 51(2)(அ) இன் பிரகாரம் மாகாண சபைகளுக்கு ஆற்றுப்படுத்தப்பட்ட சட்டமூலங்கள் தொடர்பான மாகாண சபைகளின் அபிப்பிராயங்கள்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் 4(1) மற்றும் 14 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ், நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2021 ஏப்ரல் 23 ஆம் திகதிய 2224/43 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(ii) 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் 4(1) மற்றும் 14 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ், நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2021 ஏப்ரல் 23 ஆம் திகதிய 2224/44 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(iii) (460 ஆம் அத்தியாயமான) காணி எடுத்தற் சட்டத்தின், 63(2)(ஊ) பிரிவின் கீழ் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2021 மார்ச் 18 ஆந் திகதிய 2119/56 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
குழுக்களின் அறிக்கைகள் சமர்ப்பித்தல்
அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ அநுர பிரியதர்ஷன யாபா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ நிமல் லான்சா - இரண்டு மனுக்கள்
(ii) கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க - நான்கு மனுக்கள்
(iii) கௌரவ கே. சுஜித் சஞ்ஜய பெரேரா Perera
(iv) கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன
(v) கௌரவ லலித் எல்லாவல
(vi) கௌரவ டப்ளியூ.எச்.எம். தர்மசேன
(vii) கௌரவ கிங்ஸ் நெல்சன்
(viii) கௌரவ யதாமிணீ குணவர்தன - இரண்டு மனுக்கள்
(மனுக்கள் பொது மனுக்கள் பற்றிய குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
அமைச்சார் கூற்றுக்கள்
இரசாயன உரப் பாவனை தொடர்பாக கமத்தொழில் அமைச்சர் கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் கூற்றொன்றனை முன்வைத்தார்.
சட்டமூலங்கள் சமர்ப்பித்தல்
கௌரவ நீதி அமைச்சரினால் பின்வரும் சட்டமூலங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
(i) “2019 கொரோனா வைரஸ் நோய் (கொவிட்-19) (தற்காலிக ஏற்பாடுகள்)” - கொவிட் 19 சூழ்நிலைகளின் காரணமாக விதித்துரைக்கப்பட்ட காலப்பகுதியினுள் புரியப்படுவதற்கென சட்டத்தினால் தேவைப்படுத்தப்பட்ட குறித்த சில வழக்குகளைப் புரிவதற்கு எந்த நிலைமைகள் தொடர்பில் ஆட்கள் இயலாதிருந்தனரோ அந்த நிலைமைகள் தொடர்பிலான தற்காலிக ஏற்பாடுகளைச் செய்வதற்கும், இந்த சூழ்நிலையில் நீதிமன்றம் ஒன்று தொழிற்பட முடியாதிருக்குமிடத்து மாற்று நீதிமன்றங்களைக் குறித்தளிப்பதும்; 2019 கொரோனா வைரஸ் நோய் (கொவிட்-19) கட்டுப்படுத்த வசதியளிப்பதற்கும் தொலைத்தொடர்பாடல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நீதிமன்ற நடவடிக்கைகளை நடத்துவதற்கும், கொவிட் சூழ்நிலைகள் காரணமாக ஒப்பந்தஞ்சார் கடப்பாடுகளை புரிவதற்கும் இயலாதவர்களாகவிருந்த குறித்த சில ஒப்பந்தங்களிற்கான திறந்தவர்கள் தொடர்பில் நிவாரணத்தை அளிப்பதற்கும் மற்றும் அதனோடு தொடர்புபட்ட இடைநேர் வினையான கருமங்களை ஆற்றுவதை நோக்காகக் கொண்டதுமானது
(ii) சித்திரவதைகள் மற்றும் வேறு கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது கீழ்த்தரமாக நடத்துதல் அல்லது தண்டித்தல் என்பவற்றுக்கெதிரான சமவாய (திருத்தம்) - 1994 ஆம் ஆண்டின் 22ஆம் இலக்க சித்திரவதைகள் மற்றும் வேறு கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது கீழ்த்தரமாக நடத்துதல் அல்லது தண்டித்தல் என்பவற்றுக்கெதிரான சமவாய சட்டத்தைத் திருத்துவதற்கானது
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
பின்வரும் விடயங்கள் (இன்றைய தின ஒழுங்குப் பத்திரத்தின் விடய இல. 1 முதல் முதல் 11 வரை) சபையினால் அங்கீகரிக்கப்பட்டன.
(i) (i) நிதி முகாமைத்துவ (பொறுப்பு) (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(ii) ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான ஒன்பது கட்டளைகள்
(iii) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
ஒத்திவைப்பு பிரேரணை
“நாட்டின் தற்போதைய நிலைமைகள்” தொடர்பான ஒத்திவைப்பு பிரேரணை கௌரவ ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார அவர்களினால் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1630 மணியளவில் பாராளுமன்றமானது 2021 ஜூன் 22ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks