பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2019 ஆம் ஆண்டுக்கான இலங்கை விமானப் படையின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ii) 2019 ஆம் ஆண்டுக்கான இலங்கை இராணுவத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iii) 2018 ஆம் ஆண்டுக்கான மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் உலர்வலய அபிவிருத்தி அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iv) 2018 ஆம் ஆண்டுக்கான வ/ப கொழும்பு கொமர்ஷல் உரக் கம்பனியின் வருடாந்த அறிக்கை
(v) இலங்கை சனநாயக சோசலிஷக் குடியரசின் அரசியலமைப்பின் உறுப்புரை 154 ண (4) பிரகாரம் அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்குச் சமர்ப்பிக்கும் 2021 ஆம் ஆண்டுக்கான நிதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள்
(vi) 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் 14(1) ஆம் பிரிவின் கீழ் செஸ் வரி அறவீடு தொடர்பில் வர்த்தக அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2021 சனவரி 12 ஆம் திகதிய 2210/9 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
போக்குவரத்து அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் காமினி லொக்குகே அவர்களுக்கு பதிலாக கௌரவ மொஹமட் முஸம்மில் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ வாசுதேவ நாணாயக்கார - ஒன்பது மனுக்கள்
(ii) கௌரவ (மேஜர்) பிரதீப் உந்துகொட - மூன்று மனுக்கள்
(iii) கௌரவ கிங்ஸ் நெல்சன் - இரண்டு மனுக்கள்
(iv) கௌரவ டீ. வீரசிங்க
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ சஜித் பிரேமதாச
தரையோடுகள் மற்றும் குளியளறைப் பொருட்களுக்கு இறக்குமதி தடை விதித்தல்
(ii) கௌரவ அநுர திசாநாயக்க
சுற்றுலா வழிகாட்டிகள் எதிர்கொள்ளும் சம்பள பிரச்சினைகள்
மேற்சொன்ன வினாவிற்கு சுற்றுலாத்துறை அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணதுங்க அவர்கள் பதிலளித்தார்.
(iii) கௌரவ (வண.) அதுரலியே ரதன தேரர்
மத்திய கிழக்கு நாடுகளில் இலங்கை தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்
மேற்சொன்ன வினாவிற்கு தொழில் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால த சில்வா அவர்கள் பதிலளித்தார்.
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
(i) 2016 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க, வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனச் சட்டத்தைத் திருத்துவதற்காக
“வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தம்)”
எனும் சட்டமூலத்தினை கௌரவ தொழில் அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.
(ii) 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க, குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை சட்டத்தைத் திருத்துவதற்காக
“குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை (திருத்தம்)”
எனும் சட்டமூலத்தினை கௌரவ நீதி அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுபவை)
சபையால் அங்கீகரிக்கப்பட்டன.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“கிளிநொச்சியிலுள்ள உருத்திரபுரத்தில் அமைந்துள்ள சிவன் கோவிலில் தொல்பொருள் ஆய்வு” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சிவஞானம் சிறீதரன் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2021 பெப்ரவரி 25ஆந் திகதி வியாழக்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks