E   |   සි   |  

2021 மார்ச் 23ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சனாதிபதியின் செய்திகள்

A: பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘B’: இணைப்புக் குழு நியமனம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2017 ஆம் ஆண்டுக்கான  இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை
(ii)    2018 ஆம் ஆண்டுக்கான  தேசிய லொத்தர் சபையின் வருடாந்த அறிக்கை
(iii)    2017 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட சுயாதீன தொலைக்காட்சி சேவையின் வருடாந்த அறிக்கை
(iv)    2017 ஆம் ஆண்டுக்கான  இலங்கை அணுசக்தி எரிசக்தி சபையின் வருடாந்த அறிக்கை
(v)    2018 ஆம் ஆண்டுக்கான  தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் வருடாந்த அறிக்கை
(vi)    2018 ஆம் ஆண்டுக்கான இலங்கை இறப்பர் ஆராய்ச்சி நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை

(vii)    2019 ஆம் ஆண்டுக்கான குடிவரவு குடியல்வுத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை

(viii)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு தொடர்பில்  குறிப்பிடப்பட்ட  விடயங்கள் தொடர்பான 119(4) ஆம்  பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை.
(ix)    1974 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க, சுங்க (திருத்தச்) சட்டத்தினாலும் 1988 ஆம் ஆண்டின் 83 ஆம் இலக்க, சுங்க (திருத்தச்) சட்டத்தினாலும் திருத்தப்பட்டவாறான சுங்கக் கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 235) 19(அ) பிரிவின் கீழ்  தீர்வை வரி விலக்களிப்புக்கள் தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2021 சனவரி 29 ஆம் திகதிய 2212/41 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(x)    2013 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 7(2) ஆம் பிரிவின் கீழ் நீதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2020 திசெம்பர் 23 ஆம் திகதிய 2207/6 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    மின்சக்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ டலஸ் அழகப்பெரும அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன
(ii)    கௌரவ ஜயந்த சமரவீர            -    பன்னிரண்டு மனுக்கள்
(iii)    கௌரவ மொஹான் பிரியதர்ஷன த சில்வா    -    இரண்டு மனுக்கள்
(iv)    கௌரவ கனக ஹேரத்                -    நான்கு மனுக்கள்
(v)    கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க            -    மூன்று மனுக்கள்
(vi)    கௌரவ விஜித ஹேரத்                -    நான்கு மனுக்கள்
(vii)    கௌரவ புத்திக பத்திறண                -    ஐந்து மனுக்கள்
(viii)    கௌரவ ஜயந்த கெட்டகொட            -    இரண்டு மனுக்கள்
(ix)    கௌரவ ஹர்ஷண ராஜகருணா
(x)    கௌரவ சம்பத் அதுகோரல
(xi)    கௌரவ லலித் எல்லாவல
(xii)    கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன்
(xiii)    கௌரவ நலின் பிரனாந்து
(xiv)    கௌரவ மாயாதுன்ன சிந்தக அமல்        -    இரண்டு மனுக்கள்
(xv)    கௌரவ யதாமிணீ குணவர்தன

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ சஜித் பிரேமதாச

கிராம சேவகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்

மேற்சொன்ன வினாவிற்கு நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் அரச பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கௌரவ சமல் ராஜபக்ஷ அவர்கள் பதிலளித்தார்.


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

சீன இறக்குமதி மீதான வரி தொடர்பான கூற்றொன்றினை நிதி அமைச்சர் சார்பாக நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ அஜித் நிவாட் கப்ரால் அவர்கள் முன்வைத்தார்.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

(i)    கெளரவ கயந்த கருணாதிலக்க அவர்களுக்கு “பலப்பிட்டிய ஸ்ரீ ராஹுலாராம புராண விஹாரஸ்த்த சாமனேர ஆகல்ப சங்வர்தன பிக்ஷு  கல்லூரியைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்” இனை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

(ii)    கெளரவ உத்திக பிரேமரத்ன அவர்களுக்கு “செத்சத யோகா நிகேதனய கார்ய பாரயவைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்” இனை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 4 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-

(i)    சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம்
(ii)    இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள்
(iii)    இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளை


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“நெல் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ அமரகீர்த்தி அதுகோரள அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2021 பெப்ரவரி 24ஆந் திகதி புதன்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks