E   |   සි   |  

2021 பெப்ரவரி 23ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சனாதிபதியின் செய்திகள்

A: பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘B’: தொழில்நுட்பவியல் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஆகியவற்றில் சேவையாற்றவுள்ள உறுப்பினர்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கான இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகள்

(ii)    2016 ஆம் ஆண்டுக்கான இலங்கை போக்குவரத்துச் சபையின் வருடாந்த அறிக்கை  
(iii)    2017 ஆம் ஆண்டுக்கான தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை
(iv)    2015 ஆம் ஆண்டுக்கான கூட்டுறவு மொத்த விற்பனை தாபனத்தின் வருடாந்த  அறிக்கையும் கணக்குகளும்
(v)    2017 ஆம் ஆண்டுக்கான செலசினெ தொலைக்காட்சி நிறுவனத்தின் வருடாந்த  அறிக்கை
(vi)    2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ  நிறுவகத்தின் வருடாந்த  அறிக்கைகள்
(vii)    2018 ஆம் ஆண்டுக்கான இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபையின் வருடாந்த  அறிக்கை

(viii)    2020 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2020.12.21 முதல் 2020.12.31 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் குறைநிரப்பு உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு
(ix)    2020 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2021.01.01 முதல் 2021.01.31 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் குறைநிரப்பு உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு
(x)    2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் 3(4) ஆம் பிரிவின்  கீழ் ஷங்கிரி-லா ஹொட்டேல்ஸ் லங்கா (பிறைவேட்) லிமிட்டெட் தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு,   2020 திசெம்பர் 18 ஆம் திகதிய 2206/18 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xi)    2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் 3(4) ஆம் பிரிவின்  கீழ் சினோலங்கா ஹொட்டேல்ஸ் அன்ட் ஸ்பா (பிறைவேட்) லிமிட்டெட் தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு,   2020 திசெம்பர் 18 ஆம் திகதிய 2206/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xii)    2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் 7 ஆம் பிரிவுடன் வாசிக்கப்பட வேண்டிய 29 ஆம் பிரிவின் கீழ் நிதி அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2020 நவெம்பர் 17 ஆம் திகதிய 2202/7 ஆம் இலக்க வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    கமத்தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் மஹிந்தானந்த அலுத்கமகே அவர்களுக்கு பதிலாக கௌரவ மொஹான் பிரியதர்ஷன த சில்வா அவர்களினால் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii)    சுற்றுலாத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் பிரசன்ன ரணதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ டக்ளஸ் தேவானந்தா                                                           
(ii)    கௌரவ மொஹான் பிரியதர்ஷன த சில்வா    -    இரண்டு மனுக்கள்
(iii)    கௌரவ செஹான் சேமசிங்க            -    மூன்று மனுக்கள்
(iv)    கௌரவ லக்ஷ்மன் கிரிஎல்ல                   
(v)    கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க                   
(vi)    கௌரவ நிரோஷன் பெரேரா                   
(vii)    கௌரவ ஜே.சீ. அலவத்துவல                   
(viii)    கௌரவ புத்திக பத்திறண                   
(ix)    கௌரவ குமாரசிறி ரத்னாயக்க                   
(x)    கௌரவ ஜயந்த கெட்டகொட                   
(xi)    கௌரவ குணதிலக ராஜபக்ஷ

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ சஜித் பிரேமதாச

வாகன இறக்குமதி

மேற்சொன்ன வினாவிற்கு நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ அஜித் நிவாட் கப்ரால் அவர்கள் பதிலளித்தார்.


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

சதொச  இனால் ஏற்பட்ட நட்டங்கள் தொடர்பான கூற்றொன்றினை வர்த்தக அமைச்சர் கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன அவர்கள் முன்வைத்தார்.


சிறப்புரிமைகள்

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எம்.ஏ. சுமந்திரன அவர்கள்> தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக 2020 நவம்பர் 28 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய விடயம், கௌரவ லக்ஷ்மன் கிரிஎல்ல அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 118 ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

(i)    கெளரவ திஸ்ஸ அத்தநாயக்க அவர்களுக்கு “சத்திய ஸ்ரீ கணபதி பக்தி ஜன சேவா மன்றத்தைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்” இனை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 52(6) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.

(ii)    கெளரவ அமரகீர்த்தி அதுகோரள அவர்களுக்கு “ரொசான் ரணசிங்க ஜனசஹன மன்றத்தைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்” இனை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 52(6) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் சுகாதார அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.

(iii)    கெளரவ பிரேம்நாத் சி. தொலவத்த அவர்களுக்கு “சிசிர ஜயக்கொடி சியபத மன்றத்தைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்” இனை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 52(6) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் கல்வி அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (விவாதம் ஒத்திவைக்கப்பட்ட விடயம் (2021 பெப்ரவரி 10))

விவாதிக்கப்பட்டதுடன் எதிர்வரும் தினமொன்றிற்கு ஒத்திவைக்கப்பட்டது.


அதனையடுத்து, 1300 மணியளவில் பாராளுமன்றமானது 2021 பெப்ரவரி 24ஆந் திகதி புதன்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks