பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’: கௌரவ எம்.ஏ. சுமந்திரன், பா.உ. அவர்களினது சிறப்புரிமை மீறப்பட்டதாக கேள்வி எழுப்பிய விடயம்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
(i) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் -
• 2018 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் நான்காவது தொகுதியின் XIV ஆம் பகுதியையும்; மற்றும்
• 2019 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் XIV, XV மற்றும் XVI ஆம் பகுதிகளையும், நான்காவது தொகுதியின் VI ஆம் பகுதியையும், ஐந்தாவது தொகுதியின் IV, V மற்றும் VI ஆம் பகுதிகளையும், ஆறாவது தொகுதியின் XI, XII, XIII, XIV, XV மற்றும் XVI ஆம் பகுதிகள்
(ii) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் விசேட கணக்காய்வு அறிக்கையின் எட்டாவது தொகுதியினது—
• வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையில் தரத்துடன் கூடிய வளர்ச்சிக்காக நிறைவேற்றப்பட வேண்டிய கடமைப்பொறுப்புக்களை மதிப்பிடல் தொடர்பிலான அறிக்கையின் XX ஆம் பகுதி;
• கொழும்பு மாவட்ட செயலகத்தின் கீழ் உள்ள பிரதேச செயலகங்களின் மூலம் பிரஜைகள் சாசனத்திற்கு இணங்க பொதுமக்கள் சேவைகளை நிறைவேற்றுவது தொடர்பான செயலாற்றல் தொடர்பிலான அறிக்கையின் XXI ஆம் பகுதி;
• திரிபோஷா நிகழ்ச்சித்திட்டத்தின் செயலாற்றல் மதிப்பீடு தொடர்பிலான அறிக்கையின் XXII ஆம் பகுதி; மற்றும்
பத்தாவது தொகுதியினது—
• கமநல சேவைகள் செயற் குழுக்களுக்கான 2016 மற்றும் 2017 டிசம்பர் 31 ஆம் ஆண்டுகளுக்கான நிதிக் கூற்றுக்கள் தொடர்பான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் விசேட பொழிப்பு தொடர்பிலான அறிக்கையின் XX ஆம் பகுதி
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2017 ஆம் ஆண்டுக்கான சிரம வாசனா நிதியத்தின் வருடாந்த அறிக்கை
(ii) 2019 ஆம் ஆண்டுக்கான இலங்கை வங்கியின் வருடாந்த அறிக்கை
(iii) 2017 ஆம் ஆண்டுக்கான நீர் வளச் சபையின் வருடாந்த அறிக்கை
(iv) 2018 ஆம் ஆண்டுக்கான தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை
(v) 2018 ஆம் ஆண்டுக்கான குருநாகல் பெருந்தோட்டக் கம்பனியின் வருடாந்த அறிக்கை
(vi) 2018/2019 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீலங்கன் எயார்லையின்ஸின் வருடாந்த அறிக்கை
(vii) எதிரிசிங்க டிரஸ்ட் இன்வஸ்ட்மண்ட் லிமிடட் தொடர்பாக சனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் சிபாரிசுகள்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ அநுர பிரியதர்ஷன யாபா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) கைத்தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ விமல் வீரவங்ச அவர்களுக்கு பதிலாக கௌரவ பிரேமலால் ஜயசேக்கர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ டிலான் பெரேரா - இரண்டு மனுக்கள்
(ii) கௌரவ சந்திம வீரக்கொடி - மூன்று மனுக்கள்
(iii) கௌரவ புத்திக பத்திறண - நான்கு மனுக்கள்
(iv) கௌரவ ஜயந்த கெட்டகொட
(v) கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன - இரண்டு மனுக்கள்
(vi) கௌரவ அகில எல்லாவல
(vii) கௌரவ இசுரு தொடன்கொட
(viii) கௌரவ எஸ். எம். எம். முஸ்ஸாரப்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
பிரதம அமைச்சரிடம் கேட்கப்பட்ட வினாக்கள்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் நான்கு வினாக்கள் கேட்கப்பட்டன:-
(i) கௌரவ புத்திக பத்திறண
(ii) கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்
(iii) கௌரவ (திருமதி) கோகிலா குணவர்தன
(iv) கௌரவ லலித் எல்லாவல
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ அநுர திசாநாயக்க
தரையோடுகள் இறக்குமதி
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
(i) புதிய மற்றும் பழைய பாடத்திட்டத்தின் கீழ் பல்கலைக்கழக அனுமதி தொடர்பாக 2021.01.08 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கௌரவ அநுர திசாநாயக்க அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு கல்வி அமைச்சர் கௌரவ (பேராசிரியர்) ஜீ.எல். பீரிஸ் அவர்கள் பதிலளித்தார்.
(ii) “த பினேன்ஸ் கம்பனி”யின் வைப்பாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக 2020.11.27 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கௌரவ சஜித் பிரேமதாஸ அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ அஜித் நிவாட் கப்ரால் அவர்கள் பதிலளித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1ஆம் இலக்க விடயமாகக் காணப்படும்)
விவாதிக்கப்பட்டதுடன் எதிர்வரும் தினமொன்றிற்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“செரமிக் தரையோடுகள் மற்றும் குளியலறை பொருட்கள் இறக்குமதி” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ முஜிபுர் ரஹுமான் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2021 பெப்ரவரி 11ஆந் திகதி வியாழக்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks