E   |   සි   |  

2021 ஜனவரி 20ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 35(1) ஆம் பிரிவின் கீழ் கணக்காய்வாளர் தலைமையதிபதி மூலம் சமர்ப்பிக்கப்பட்ட  தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான வருடாந்த வேலை நிகழ்ச்சித் திட்டத்தை அச்சட்டத்தின் 35(3) ஆம் பிரிவின் கீழ்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2019 ஆம் ஆண்டுக்கான  தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ii)    2019 ஆம் ஆண்டுக்கான தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iii)    2019 ஆம் ஆண்டுக்கான கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில், நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் கடற்றொழில் பிரிவின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iv)    2019 ஆம் ஆண்டுக்கான சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை

(v)    2018 ஆம் ஆண்டுக்கான இலங்கை சம்மேளனப் பணியகத்தின் வருடாந்த அறிக்கை

(vi)    1958 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஊழியர் சகாய நிதியச் சட்டத்தின் 8 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 46 ஆம் பிரிவின் கீழ் தொழில் அமைச்சரால் ஆக்கப்பட்டு,   2021 சனவரி 06 ஆம் திகதிய 2209/41 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(vii)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இலங்கைப் பாராளுமன்றம் தொடர்பில்  குறிப்பிடப்பட்ட  விடயங்கள் தொடர்பான 119(4) ஆம்  பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(viii)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 21 ஆம் பிரிவுடனும் 139 ஆம் பிரிவுடனும் சேர்த்து வாசிக்கப்படும் 27(1) ஆம் பிரிவின்  கீழ்  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின்  மீது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின்  கலைப்பீடத்தில் மொழிபெயர்ப்புக் கற்கைகள் துறையொன்றை நிறுவுதல் தொடர்பில் உயர்கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சரால் ஆக்கப்பட்டு,  2020 பெப்ருவரி 19 ஆம் திகதிய 2163/21 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(ix)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1) ஆம் பிரிவின்  கீழ்  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின்  மீது இலங்கை கம்பஹா விக்கிரமாராய்ச்சி சுதேச மருத்துவ பல்கலைக்கழகத்தினை நிறுவுதல் தொடர்பில் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு,  2020 ஒக்டோபர் 28 ஆம் திகதிய 2199/12 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(x)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 20(4)(ஆ) ஆம் பிரிவின்  கீழ் மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பவியல் நிறுவகத்தின் பணிப்பாளருக்குப் பதிலாக  2020.10.01 ஆம் திகதி  நடைமுறைக்கு வரும் வகையில் தகுதிவாய்ந்த அதிகாரியாக கலாநிதி சமிந்தலால் சுஜீவ லெவன்கமகே அவர்களை   நியமித்தல் தொடர்பில் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு,   2020 செப்டெம்பர் 30 ஆம் திகதிய 2195/36 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ (பேராசிரியர்) சன்ன ஜயசுமன
(ii)    கௌரவ அநுர திசாநாயக்க
(iii)    கௌரவ புத்திக பத்திறண        -    இரண்டு மனுக்கள்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ சஜித் பிரேமதாச

தேயிலை சிறு பயிர்ச்செய்கையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

(i)    கெளரவ யூ.கே. சுமித் உடுகும்புர அவர்களுக்கு “ரதனதிஸ்ஸ சமாதான மன்றத்தைக்  கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்” இனை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 52(6) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் கல்வி அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.

(ii)    கெளரவ யதாமிணீ குணவர்தன அவர்களுக்கு “ஸ்ரீ சாக்கியசிங்காராம விகாரஸ்த கார்யசாதக சங்விதானவைக்   கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்” இனை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 52(6) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


ஒத்திவைப்புப் பிரேரணை

“பல்வேறு சட்டவாக்கங்களின் கீழ் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டும் கூறப்பட்டுள்ளவாறு அமுல்படுத்தப்படாத அமைச்சர்களினால் அதிவிசேட வர்த்தமானிகளில் வெளியிடப்பட்ட கட்டளைகள்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ அநுர திசாநாயக்க அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1630 மணியளவில் பாராளுமன்றமானது 2021 பெப்ரவரி 09ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks