பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2019 ஆம் ஆண்டுக்கான தேசிய சகவாழ்வு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, மற்றும் இந்து சமய விவகார அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ii) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் நிதி ஆணைக்குழு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை.
(iii) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் உயர் நீதிமன்றம், (கௌரவ உயர் நீதிமன்ற நீதியரசர்கள்—செலவினத் தலைப்பு 04) தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(iv) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 20(4)(ஆ) ஆம் பிரிவின் கீழ் கம்பஹா விக்கிரமாராச்சி ஆயுர்வேத நிறுவகத்தின் பணிப்பாளருக்குப் பதிலாக 2020.09.13 ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் தகுதிவாய்ந்த அதிகாரியாக சிரேஷ்ட பேராசிரியர் ஜனித்தா அபேவிக்கிரம லியனகே அவர்களை நியமித்தல் தொடர்பில் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2020 செப்டெம்பர் 16 ஆம் திகதிய 2193/23 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ எஸ்.எம். சந்திரசேன
(ii) கௌரவ டி.வீ. சானக - இரண்டு மனுக்கள்
(iii) கௌரவ திலிப் வெதஆரச்சி
(iv) கௌரவ சாந்த பண்டார
(v) கௌரவ சம்பத் அதுகோரல - இரண்டு மனுக்கள்
(vi) கௌரவ குலசிங்கம் திலீபன்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ சஜித் பிரேமதாச
மாலை நேர வகுப்புக்களை மீள திறத்தல்
மேற்சொன்ன வினாவிற்கு கல்வி அமைச்சர் கௌரவ (பேராசிரியர்) ஜீ.எல். பீரிஸ் அவர்கள் பதிலளித்தார்.
(ii) கௌரவ அநுர திசாநாயக்க
புதிய மற்றும் பழைய பாடத்திட்டத்தின் கீழ் பல்கலைக்கழக அனுமதி
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
புலம் பெயர் இலங்கை தொழிலாளர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான திட்டம் தொடர்பாக 2021.01.07 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கௌரவ அநுர திசாநாயக்க அவர்களினால் எழுப்பிய வினாக்களிற்கு தொழில் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால த சில்வா அவர்கள் பதிலளித்தார்.
சிறப்புரிமைக் கேள்விகள்
கௌரவ யதாமிணீ குணவர்தன
ஹன்சாட் அறிக்கையில் தனது உரையின் ஒரு பகுதியை சேர்த்துக் கொள்ளாமை
ஒத்திவைப்புப் பிரேரணை
“நாட்டின் தற்போதைய நிலைமை” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ (டாக்டர்) ராஜித சேனாரத்ன அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1709 மணியளவில் பாராளுமன்றமானது 2021 ஜனவரி 19ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks