E   |   සි   |  

2021 ஜனவரி 07ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ :  அரசாங்க நிதி பற்றிய குழுவில் கடமையாற்றவுள்ள மேலதிக உறுப்பினர்கள்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

(i)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2019 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் X, XI, XII மற்றும் XIII ஆம் பகுதிகளையும், நான்காவது தொகுதியின் IV மற்றும் V ஆம் பகுதிகளையும், ஆறாவது தொகுதியின் III, IV, V, VI, VII, VIII, IX மற்றும் X ஆம் பகுதிகள்

(ii)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் விசேட கணக்காய்வு அறிக்கையின் எட்டாவது தொகுதியினது—
•    XIII ஆம் பகுதியின் தேசிய கல்விக் கொள்கை தீர்மானித்தல் மற்றும் செயற்படுத்தல் தொடர்பான அறிக்கை;
•    XIV ஆம் பகுதியின் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் அதிக மண் சரிவு ஆபத்துள்ள வலயங்களில் வாழும் மக்களுக்கான மீள்குடியேற்ற செயற்திட்டம் தொடர்பான செயலாற்றல் தொடர்பிலான அறிக்கை;
•    XV ஆம் பகுதியின் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நடைமுறைகள் மற்றும் சிபார்சுகளை அமுல்படுத்துதல் தொடர்பான மதிப்பீடு தொடர்பிலான அறிக்கை; மற்றும்
•    XVI ஆம் பகுதியின் ஹொரொவ்பொதான யானைகள் தடுப்பு மத்திய நிலையத்தின் செயலாற்றல் தொடர்பிலான அறிக்கை


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

2019 ஆம் ஆண்டுக்கான ஜய கன்டேனர் டர்மினல்ஸ் லிமிட்டெடின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

வர்த்தக அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ விதுர விக்ரமநாயக                 -       இரண்டு மனுக்கள்
(ii)    கௌரவ தேனுக விதானகமகே             -       இரண்டு மனுக்கள்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ அநுர திசாநாயக்க

புலம் பெயர் இலங்கை தொழிலாளர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான திட்டம்


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

(i)    கொவிட்-19 இற்கான தடுப்பூசி தொடர்பாக 2021.01.05 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கௌரவ சஜித் பிரேமதாச
(ii)    கொவிட்-19 காரணமாக இறந்த உடல்களை தகனம் செய்தல் தொடர்பாக 2020.12.10 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கௌரவ ஜீ. ஜீ. பொன்னம்பலம்

ஆகியோரினால் எழுப்பிய வினாக்களிற்கு சுகாதார அமைச்சர் கௌரவ (திருமதி) பவித்ராதேவி வன்னிஆரச்சி அவர்கள் பதிலளித்தார்.


அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள்

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 112 (1) இன் ஏற்பாடுகள் மற்றும் 2020 திசம்பர் 08 ஆம் திகதி தெரிவுக் குழுவினால் தீர்மானிக்கப்பட்டவாறு 2020 செப்டெம்பர் 08 ஆம் திகதி பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட இருபத்தெட்டு (28) அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்களுக்கு மேலதிகமாக பின்வரும் இரண்டு (2) அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள் பெயர் குறிப்பிட்டு நியமிக்கப்படுமாக:-

1. தொழில்நுட்ப அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
2. பொதுமக்கள் பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு

ஆலோசனைக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்ட விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, ஒவ்வோர் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவும், உாிய விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரவை அமைச்சர் அதன் தவிசாளராகவும், அதன் இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் உட்பட தெரிவுக் குழுவினால் பெயர்குறிப்பிடப்படும் வேறு ஐந்து (05) பாராளுமன்ற உறுப்பினர்கைளக் கொண்டிருக்குமாக.

ஒவ்வொரு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினதும் கூட்ட நடப்பெண் மூன்று (3) உறுப்பினர்களாக இருத்தல் வேண்டும்.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ அவர்களுக்கு பின்வரும் சட்டமூலங்களை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டன.

(i)    “1999 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க, புகையிலை வரிச் சட்டம் (திருத்தம்)”
(ii)    “1975 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க, சொத்துக்களையும் பொறுப்புக்களையும் வெளிப்படுத்தல் சட்டம் (திருத்தம்)”

நிலையியற் கட்டளை 52(6) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் (i) நிதி அமைச்சருக்கும் சட்டமூலம் (ii) அதிமேதகு ஜனாதிபதிக்கும் ஆற்றுப்படுத்தப்பட்டன.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 11 வரையான விடயங்களாகக் காணப்படுபவை) சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-

(i)    துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் நான்கு கட்டளைகள்
(ii)    உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் இரண்டு கட்டளைகள்
(iii)    நிதிச் சட்டத்தின் கீழ் கட்டளை
(iv)    செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் மூன்று கட்டளைகள்
(v)    புலமைச் சொத்து (திருத்தச்) சட்டமூலம்


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“மிகை ஊழியர் அடிப்படையில் அதிபர்களுக்கான நியமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ எச். நந்தசேன அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1811 மணியளவில் பாராளுமன்றமானது 2021 ஜனவரி 08ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks