பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
புதிய உறுப்பினர்களின் உறுதிப்பிரமாணம் அல்லது சத்தியப்பிரமாணம்
கெளரவ (வண.) அதுரெலியே ரதன தேரர் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக கெளரவ சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
சனாதிபதியின் செய்திகள்
A: பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘B’ : பாராளுமன்றத்தின் கௌரவத்தையும், அபிமானத்தையும் பாதுகாத்தல்
‘C’: அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2019 ஆம் நிதி ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் VIII, IX மற்றும் X ஆம் பகுதிகளையும் மூன்றாவது தொகுதியின் VI ஆம் பகுதியையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் IV ஆம் பகுதி
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2016 ஆம் ஆண்டுக்கான தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் வருடாந்த அறிக்கையும் நிதிக்கூற்றுக்களும்
(ii) 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளுக்கான ரணவிரு சேவா அதிகாரசபையின் ஆண்டறிக்கைகள்
(iii) 2018 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி லொத்தர் சபையின் ஆண்டறிக்கையும் நிதிக்கூற்றுகளும்
(iv) 2018 ஆம் ஆண்டுக்கான தேசிய தொழிற் கற்கைகள் நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை
(v) 2018 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள்
(vi) 2018 ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள்
(vii) 2017 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ ஜயவர்தனபுர பொது மருத்துவமனையின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள்
(viii) 2017 ஆம் ஆண்டுக்கான இலங்கை உள்ளூர் ஆளுகை நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(ix) 2015/2016 மற்றும் 2016/2017 ஆம் ஆண்டுகளுக்கான லங்கா லேலண்ட் (தனியார்) லிமிடெட்டின் நிதி அறிக்கைகள்
(x) 2017 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ லங்கா சீமெந்துக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை
(xi) 2017 ஆம் ஆண்டுக்கான தேசிய வடிவமைப்பு நிலையத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் நிதிக்கூற்றுக்கள்
(xii) 2018/2019 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட இலங்கை பொஸ்பேட் நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(xiii) 2018 ஆம் ஆண்டுக்கான தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை
(xiv) 2018 ஆம் ஆண்டுக்கான இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள்
(xv) 2018 ஆம் ஆண்டுக்கான சுற்றுலா அபிவிருத்தி நிதியத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள்
(xvi) 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க, அத்தியாவசிய பொதுமக்கள் சேவை சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் சனாதிபதி அவர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, 2020 திசெம்பர் 30 ஆம் திகதிய 2208/12 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் அதன் அட்டவணையில் பிரசுரிக்கப்பட்ட பிரகடனம்
(xvii) 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி அமைச்சரால் விதிக்கப்பட்டு 2020 ஆகஸ்ட் 14 ஆம் திகதிய 2188/50 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xviii) 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 5 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி அமைச்சரால் விதிக்கப்பட்டு 2020 ஆகஸ்ட் 21 ஆம் திகதிய 2189/39 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xix) 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி அமைச்சரால் விதிக்கப்பட்டு 2020 செப்தெம்பர் 03 ஆம் திகதிய 2191/26 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xx) 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி அமைச்சரால் விதிக்கப்பட்டு 2020 செப்தெம்பர் 30 ஆம் திகதிய 2195/29 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xxi) 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி அமைச்சரால் விதிக்கப்பட்டு 2020 ஒக்டோபர் 13 ஆம் திகதிய 2197/12 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xxii) 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி அமைச்சரால் விதிக்கப்பட்டு 2020 ஒக்டோபர் 26 ஆம் திகதிய 2199/1 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xxiii) (அத்தியாயம் 235) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழ் இறக்குமதித் தீர்வை வரி தொடர்பான தீர்மானம்
(2020 செப்தெம்பர் 21 ஆம் திகதிய 2194/5 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை)
(xxiv) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் புத்தசாசனம், மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xxv) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ வாசுதேவ நாணாயக்கார - மூன்று மனுக்கள்
(ii) கௌரவ எச். நந்தசேன
(iii) கௌரவ கயாஷான் நவனந்த
(iv) கௌரவ அனுப பஸ்குவல் - இரண்டு மனுக்கள்
(v) கௌரவ மாயாதுன்ன சிந்தக அமல்
(vi) கௌரவ மதுர விதானகே - இரண்டு மனுக்கள்
(vii) கௌரவ டீ. வீரசிங்க
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ சஜித் பிரேமதாச
கொவிட்-19 இற்கான தடுப்பூசி
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ ஜகத் புஷ்பகுமார அவர்களுக்கு “இலங்கை பிளாஸ்ரிக் மற்றும் இறப்பர் நிறுவகத்தைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்” இனை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிலையியற் கட்டளை 52(6) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் கல்வி அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 4 வரையான விடயங்களாகக் காணப்படுபவை) சபையால் நிறைவேற்றப்பட்டன:-
(i) கடை, அலுவலக ஊழியர் (ஊழியத்தையும் வேதனத்தையும் ஒழுங்குபடுத்தல்) (திருத்தச்) சட்டமூலம்
(ii) பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம்
(iii) குறைந்தபட்ச வேதனங்கள் (இந்தியத் தொழிலாளர்கள்) (திருத்தச்) சட்டமூலம்
(iv) தொழிற்சாலைகள் (திருத்தச்) சட்டமூலம்
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“மஞ்சள் பயிர்ச்செய்கையாளர்களை பாதுகாத்தல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ டீ. வீரசிங்க அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1722 மணியளவில் பாராளுமன்றமானது 2021 ஜனவரி 06ஆந் திகதி புதன்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks