E   |   සි   |  

2020 டிசம்பர் 10ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ : இணைந்த வருடாந்த பொதுக் கூட்டம்
‘B’: இன்றைய விவாதத்திற்கான கால ஒதுக்கீடு


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம்        உறுப்புரையின் பிரகாரம் 2019 ஆம் நிதி ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் VI மற்றும் VII ஆம் பகுதிகள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2017 ஆம் ஆண்டுக்கான தேசிய லொத்தர் சபையின் ஆண்டறிக்கை மற்றும் நிதிக்கூற்றுகள்
(ii)    2017 ஆம் ஆண்டுக்கான அரச ஈட்டு முதலீட்டு வங்கியின் ஆண்டறிக்கை மற்றும் நிதிக்கூற்றுகள்
(iii)    2019 ஆம் ஆண்டுக்கான தேசிய சேமிப்பு வங்கியின் ஆண்டறிக்கை மற்றும் நிதிக்கூற்றுகள் (நூல் 1 மற்றும் நூல் 2)
(iv)    2018 ஆம் ஆண்டுக்கான யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள்
(v)    2019 ஆம் ஆண்டுக்கான றுஹுண பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள்
(vi)    2019 ஆம் ஆண்டுக்கான இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள்
(vii)    2019 ஆம் ஆண்டுக்கான பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விவசாயப் பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் ஆண்டிறிக்கை மற்றும் கணக்குகள்
(viii)   2019 ஆம் ஆண்டுக்கான மருத்துவப் பட்டப்பின் படிப்பு நிறுவகத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள்
(ix)    20152016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளுக்கான சுகததாச தேசிய விளையாட்டுக் கட்டிடத்தொகுதி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கைகள்
(x)    2018 ஆம் ஆண்டுக்கான ஊக்கு பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான இலங்கை முகவராண்மையின் வருடாந்த அறிக்கை

(xi)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமை திணைக்களம் தொடர்பில்  குறிப்பிடப்பட்ட  விடயங்கள் தொடர்பான 119(4) ஆம்  பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xii)    2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க, துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் 3(3) ஆம் பிரிவின் கீழ்,  துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீடு தொடர்பாக  நிதி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2020 செப்டெம்பர் 02 ஆம் திகதிய 2191/25 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xiii)    2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க, துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் 3(3) ஆம் பிரிவின் கீழ்,  துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீடு தொடர்பாக  நிதி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2020 ஒக்டோபர் 23 ஆம் திகதிய 2198/57 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xiv)    2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க, துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் 3(3) ஆம் பிரிவின் கீழ்,  துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீடு தொடர்பாக  நிதி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2020 ஒக்டோபர் 26 ஆம் திகதிய 2199/2 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xv)    2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க, துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் 3(3) ஆம் பிரிவின் கீழ்,  துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீடு தொடர்பாக  நிதி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2020 நவம்பர் 28 ஆம் திகதிய 2203/37 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xvi)    1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின்  கீழ் உற்பத்தி வரி தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு,   2020  ஆகஸ்ட் 21 ஆம் திகதிய 2189/47 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xvii)    1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின்  கீழ் உற்பத்தி வரி தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு,   2020  ஒக்டோபர் 12 ஆம் திகதிய 2197/3 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xviii)    2003 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 2(1) ஆம் பிரிவின் கீழ் புறப்படுகை அறவீடு தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2020 செப்டெம்பர் 21 ஆம் திகதிய 2194/6 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xix)    2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க செயல்நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் செயல்நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்கள் தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2020 நவம்பர் 10 ஆம் திகதிய 2201/6 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xx)    2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க செயல்நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் செயல்நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்கள் தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2020 நவம்பர் 16 ஆம் திகதிய 2202/3 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xxi)    2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க செயல்நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்கள் சட்டத்தின் 3(4) ஆம் பிரிவின் கீழ் செயல்நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்கள் தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2020 நவம்பர் 24 ஆம் திகதிய 2203/16 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xxii)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1) ஆம் பிரிவின்  கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின்  மீது இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின்  தகவல்முறைமைகள் துறை மற்றும் கணினி கற்கைத் துறை என்பனவற்றை தாபித்தல் தொடர்பில் உயர்கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சரால் ஆக்கப்பட்டு,  2020 சனவரி 30 ஆம் திகதிய 2160/41 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ ரன்ஜித் சியம்பலாபிடிய        -    மூன்று மனுக்கள்
(ii)    கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே                   
(iii)    கௌரவ மொஹான் பிரியதர்ஷன த சில்வா                   
(iv)    கௌரவ டிலான் பெரேரா                   
(v)    கௌரவ சாமர சம்பத் தசனாயக

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ ஜீ. ஜீ. பொன்னம்பலம்

கொவிட்-19 காரணமாக இறந்த உடல்களை தகனம் செய்தல்


அரசாங்க நிதி பற்றிய குழு

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 121(1) இன் ஏற்பாடுகள் மற்றும் 2020  செப்தெம்பர் மாதம் 08 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை என்பனவற்றினால் தடைபெறாமல் 2020 டிசம்பர் மாதம் 08 ஆம் திகதி தெரிவுக் குழுவினால் தீர்மானிக்கப்பட்டவாறு, ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் கடமையாற்றுவதற்காக அரசாங்க நிதி பற்றிய குழுவானது தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் இருபத்தொரு (21) உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(i)    ஒதுக்கீட்டுச் (2021) சட்டமூலம்  - குழு

ஒதுக்கீட்டுச் (2021) சட்டமூலம் - ஒதுக்கப்பட்ட இருபதாம் நாள் - குழு நிலை விவாதம்

இன்று ஒதுக்கீட்டுச் (2021) சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்), 97 பெரும்பான்மை வாக்குகளால் (ஆதரவாக 151; எதிராக 54) சபையினால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 மற்றும் 3 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுபவை) சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-

(i)    காப்புறுதித் தொழிலை ஒழுங்குபடுத்தற் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(ii)    வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் கட்டளை


அதனையடுத்து, 1832 மணியளவில் பாராளுமன்றமானது 2021 ஜனவரி 05ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.



[வரவு செலவுத் திட்டம் 2021]


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks