E   |   සි   |  

2020 டிசம்பர் 03ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

பணியாட்டொகுதிப் பிரதானியும் பாராளுமன்றப் பிரதிச் செயலாளர் நாயகமுமானவர் நியமனம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2017 ஆம் ஆண்டுக்கான இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை வருடாந்த அறிக்கை
(ii)    2017 ஆம் ஆண்டுக்கான பிரதேச அபிவிருத்தி வங்கியின் வருடாந்த அறிக்கை
(iii)    2017 ஆம் ஆண்டுக்கான தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை
(iv)    2018 ஆம் ஆண்டுக்கான இலங்கை வங்கியின் வருடாந்த அறிக்கை
(v)    2016 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட லங்கா மின்சார (தனியார்) கம்பனியின் வருடாந்த அறிக்கை
(vi)    2018 ஆம் ஆண்டுக்கான இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் வருடாந்த அறிக்கை
(vii)    2016 ஆம் ஆண்டுக்கான லங்கா சீமெந்துக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள்
(viii)    2015/2016 ஆம் ஆண்டுகளுக்கான மாந்தை சோல்ட் லிமிற்றெற்றின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள்
(ix)    2016/2017 ஆம் ஆண்டுகளுக்கான மாந்தை சோல்ட் லிமிற்றெற்றின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள்
(x)    2017 ஆம் ஆண்டுக்கான சிலாபம் பெருந்தோட்ட நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை

(xi)    2021 வரைவு மதிப்பீட்டின் நிரல்களில் 2020 நவம்பர் 20 ஆம் திகதிய 2202/25 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையின் அறிவித்தலுக்கமைய உத்தேச திருத்தங்களின் பட்டியல்
(xii)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் சுற்றுலாத்துறை அமைச்சு தொடர்பில்  குறிப்பிடப்பட்ட  விடயங்கள் தொடர்பான 119(4) ஆம்  பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ விஜித பேருகொட                    
(ii)    கௌரவ டிலான் பெரேரா                    
(iii)    கௌரவ வருண லியனகே                    
(iv)    கௌரவ (மேஜர்) பிரதீப் உந்துகொட                    
(v)    கௌரவ இசுரு தொடன்கொட                    
(vi)    கௌரவ கிங்ஸ் நெல்சன்
(vii)    கௌரவ எம். டப்ளியு. டீ. சஹன் பிரதீப் விதான                  
(viii)    கௌரவ தவராஜா கலை அரசன்                    
(ix)    கௌரவ யதாமிணீ குணவர்தன         -      இரண்டு மனுக்கள்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

மஹர சிறைச்சாலையில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக 2020.12.01 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கௌரவ அநுர திசாநாயக்க அவர்கள் எழுப்பிய வினாவிற்கு நீதி அமைச்சர், கௌரவ எம். யூ. எம். அலி சப்ரி அவர்கள் பதிலளித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச் (2021) சட்டமூலம்  - குழு

ஒதுக்கீட்டுச் (2021) சட்டமூலம் - ஒதுக்கப்பட்ட பதின்நான்காம் நாள் - குழு நிலை விவாதம்


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“மஹர சிறைச்சாலையில் இறப்புகள் மற்றும் காயங்களுக்கு உட்பட்ட சிறைக்கைதிகள் மற்றும் கொவிட் -19 பரவல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ முஜிபுர் ரஹுமான் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1927 மணியளவில் பாராளுமன்றமானது 2020 டிசம்பர் 04ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2021]


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks