E   |   සි   |  

2020 டிசம்பர் 02ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

(i)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் —
•    2017 ஆம் நிதி ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் XX ஆம் பகுதியையும்;
•     2018 ஆம் நிதி ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் XX ஆம் பகுதியையும்; மற்றும்
•    2019 ஆம் நிதி ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் III, IV மற்றும் V ஆம் பகுதிகளையையும்,  மூன்றாவது தொகுதியின் III, IV மற்றும் V ஆம் பகுதிகளையும், ஒன்பதாவது தொகுதியின் III ஆம் பகுதி

(ii)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் —
•    தேசிய உர மானிய நிகழ்ச்சித்திட்டத்தினை அமுல்படுத்துகையில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் தொடர்பான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் விசேட கணக்காய்வு அறிக்கையின் பத்தாவது தொகுதியின் XVIII ஆம் பகுதி; மற்றும்
•    மட்டக்களப்பு தனியார் பல்கைலக்கழக கல்லூரியை ஸ்தாபித்தல் மற்றும் செயற்படுத்தல் நடைமுறை தொடர்பான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் விசேட  கணக்காய்வு அறிக்கையின் பத்தாவது தொகுதியின் XIX ஆம் பகுதி


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2016 ஆம் ஆண்டுக்கான தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை
(ii)    2016 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஏற்றுமதிக் கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை
(iii)    2017 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி லொத்தர் சபையின் வருடாந்த அறிக்கை
(iv)    2017 ஆம் ஆண்டுக்கான இலங்கை அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை
(v)    2017 ஆம் ஆண்டுக்கான இலங்கை அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ விதுர விக்ரமநாயக                    
(ii)    கௌரவ அநுராத ஜயரத்ன                      
(iii)    கௌரவ ச. வியாழேந்திரன்                    
(iv)    கௌரவ எஸ். பீ. திசாநாயக்க                    
(v)    கௌரவ விஜித ஹேரத்            -    பதினொன்று மனுக்கள்                    
(vi)    கௌரவ அசோக்க பிரியந்த                                       
(vii)    கௌரவ லலித் எல்லாவல                    
(viii)    கௌரவ அசங்க நவரத்ன                    
(ix)    கௌரவ குமாரசிறி ரத்னாயக்க

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ சஜித் பிரேமதாச

இலங்கை தொடர்பான பிட்ச் மதிப்பீடுகள்

மேற்சொன்ன வினாவிற்கு நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ அஜித் நிவாட் கப்ரால் அவர்கள் பதிலளித்தார்.


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

எதிர்பார்க்கப்படும் சூறாவளி புயலுக்கு எதிராக அரசாங்கம் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான கூற்றொன்றினை நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் அரச பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் கௌரவ சமல் ராஜபக்ஷ அவர்கள் முன்வைத்தார்.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

(i)    கெளரவ எஸ்.எம். மரிக்கார் அவர்களுக்கு “இலங்கை இயன்மருத்துவச் சங்கத்தை கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்” இனை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 52(6) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் சுகாதார அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.

கெளரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களுக்கு பின்வரும் சட்டமூலங்களை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டன.

(ii)    “திருமணத்திற்கான ஆகக்குறைந்த வயது”
(iii)    “திருமணப் பதிவு (திருத்தம்)”
(iv)    “சிவில் நடவடிக்கைமுறைச் சட்டகோவை(திருத்தம்) ”

நிலையியற் கட்டளை 52(6) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலங்கள் (ii) மற்றும் (iii) பாதுகாப்பு அமைச்சருக்கும் சட்டமூலம் (iv) நீதி அமைச்சருக்கும் ஆற்றுப்படுத்தப்பட்டன.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(i)    ஒதுக்கீட்டுச் (2021) சட்டமூலம்  - குழு

ஒதுக்கீட்டுச் (2021) சட்டமூலம் - ஒதுக்கப்பட்ட பதின்மூன்றாம் நாள் - குழு நிலை விவாதம்

(ii) நிர்மாணத்தொழில் அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் ஐந்து ஒழுங்குவிதிகள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 முதல் 6 வரையான விடயங்களாகக் காணப்படுபவை)

சபையால் அங்கீகரிக்கப்பட்டன.


அதனையடுத்து, 1818 மணியளவில் பாராளுமன்றமானது 2020 டிசம்பர் 03ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2021]


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks