E   |   සි   |  

2020 ஒக்டோபர் 22ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சனாதிபதியின் செய்திகள்

A: பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘B’ : உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதி கிடைக்கப் பெறல்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2019 ஆம் ஆண்டுக்கான வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை

(ii)    அரசாங்க பொறுப்பு முயற்சிகள் குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட  அறிக்கையில் குறிப்பிடப்பட்ட  விடயங்கள் தொடர்பான 120(4) ஆம்  பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ காமினி லொக்குகே                            
(ii)    கௌரவ (டாக்டர்) திலக் ராஜபக்ஷ

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

பின்வரும் சட்டமூலங்களை கௌரவ தொழில் அமைச்சர் பிரேரித்தார்-

(i)    கடை, அலுவலக ஊழியர் (ஊழியத்தையும் வேதனத்தையும் ஒழுங்குபடுத்தல்) (திருத்தம்) - (129 ஆம் அத்தியாயமான) கடை, அலுவலக ஊழியர் (ஊழியத்தையும் வேதனத்தையும் ஒழுங்குபடுத்தல்) சட்டத்தைத் திருத்துவதற்காக

(ii)    பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தம்) - 1956 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க, பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் சட்டத்தைத் திருத்துவதற்காக

(iii)    குறைந்தபட்ச வேதனங்கள் (இந்தியத் தொழிலாளர்கள்) (திருத்தம்) - (135 ஆம் அத்தியாயமான) குறைந்தபட்ச வேதனங்கள் (இந்தியத் தொழிலாளர்கள்) கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்காக

(iv)    தொழிற்சாலைகள் (திருத்தம்) - (128 ஆம் அத்தியாயமான) தொழிற்சாலைகள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்காக


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

அரசியலமைப்புக்கான இருபதாவது திருத்தச் சட்டமூலம்

சட்டமூலம் மீதான இரண்டாம் மதிப்பீடு வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு, பின்னர் சபையால் நிறைவேற்றப்பட்டது. (ஆதரவாக 156; எதிராக 65)

சட்டமூலம் மீதான மூன்றாம் மதிப்பீடு வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு (ஆதரவாக  156; எதிராக  65; விலகியிருந்தோர் 0; சமுகமளிக்காதோர் 01) மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் சபையால் நிறைவேற்றப்பட்டதுடன் சட்டமூலமானது திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.


அதனையடுத்து, 2136 மணியளவில் பாராளுமன்றமானது 2020 ஒக்டோபர் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks