பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
(i) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 41ஆ(6) உறுப்புரையின் மற்றும் 1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டத்தின் 30 ஆம் வாசகத்தின் பிரகாரம், 2019 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்கான (2019.04.01 - 2019.06.30) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை; மற்றும்
(ii) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 41ஆ(6) உறுப்புரையின் பிரகாரம், 2019 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டுகளுக்கான (2019.10.01 - 2019.12.31) மற்றும் 2020 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டு (2020.01.01 - 2020.03.31) மற்றும்இரண்டாம் காலாண்டுக்கான (2020.04.01 - 2020.06.30) எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கைகள்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2019 ஆம் ஆண்டுக்கான வீதிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ii) 2019 ஆம் ஆண்டுக்கான துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(iii) 2019 ஆம் ஆண்டுக்கான சிறைச்சாலைகள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(iv) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2020.02.18 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத் தொடரின் முதலாவது அறிக்கையில் தேசிய பொலிஸ் ஆணைக்குழு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(v) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2020.02.18 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத் தொடரின் முதலாவது அறிக்கையில் பெருநகரம், மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(vi) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2020.02.18 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத் தொடரின் முதலாவது அறிக்கையில் தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(vii) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2020.02.18 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத் தொடரின் முதலாவது அறிக்கையில் தொழில் திணைக்களம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(viii) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2020.02.18 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத் தொடரின் முதலாவது அறிக்கையில் மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(ix) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 20(4)(ஆ) ஆம் பிரிவின் கீழ், உயர்கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2020 மே 18 ஆம் திகதிய 2176/2 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகள்
(x) மருத்துவக் கட்டளைச் சட்டத்தின் (105 ஆம் அத்தியாயமான) 19(உ) ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 72 பிரிவின் கீழ் சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2018 சனவரி 26 ஆம் திகதிய 2055/54 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xi) மருத்துவக் கட்டளைச் சட்டத்தின் (105 ஆம் அத்தியாயமான) 19(உ) ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 72 பிரிவின் கீழ் சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 திசெம்பர் 26 ஆம் திகதிய 2155/15 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xii) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2020.02.18 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத் தொடரின் முதலாவது அறிக்கையில் மின்சக்தி மற்றும் வலுச் சக்தி அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xiii) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2020.02.18 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத் தொடரின் முதலாவது அறிக்கையில் கைத்தொழில் மற்றும் வணிக அலுவல்கள் அமைச்சு தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பியங்கர ஜயரத்ன
(ii) கௌரவ சந்திம வீரக்கொடி - நான்கு மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ சஜித் பிரேமதாஸ
அங்கவீனமுற்ற படைவீரர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்
மேற்சொன்ன வினாவிற்கு நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் கௌரவ சமல் ராஜபக்ஷ அவர்கள் பதிலளித்தார்.
ஒத்திவைப்புப் பிரேரணை
“2019 ஆம் நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டுக்கான (2019.07.01 - 2019.09.30) தேர்தல் ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ சாகர காரியவசம் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2020 செப்டெம்பர் 24ஆம் திகதி வியாழக்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks