பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’: பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2018 ஆம் ஆண்டுக்கான மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ii) 22017 ஆம் ஆண்டுக்கான இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபையின் ஆண்டறிக்கை
(iii) 2018.03.01 முதல் 2018.10.26 வரையிலான காலப்பகுதிக்கான அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவினால் 2019.10.23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடரின் மூன்றாவது அறிக்கையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 120(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(iv) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 20(4)(ஆ) ஆம் பிரிவின் கீழ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்குப் பதிலாக 2019.08.07 ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் தகுதிவாய்ந்த அதிகாரியாக எமிரிடஸ் பேராசிரியர் கதிர்காமநாதன் கந்தசாமி அவர்களை நியமித்தல் தொடர்பில் நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 ஆகஸ்ட் 23 ஆம் திகதிய 2137/94 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(v) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 20(4)(ஆ) ஆம் பிரிவின் கீழ் மொறட்டுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப நிறுவகத்தின் பணிப்பாளருக்குப் பதிலாக 2019.08.15 ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் தகுதிவாய்ந்த அதிகாரியாக (ஓய்வுபெற்ற) மேஜர் ஜெனரல் சாந்தகுமார் திருநாவுக்கரசு அவர்களை நியமித்தல் தொடர்பில் நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 ஆகஸ்ட் 23 ஆம் திகதிய 2137/95 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(vi) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 20(4)(ஆ) ஆம் பிரிவின் கீழ் கம்பஹா விக்கிரமாராச்சி ஆயுர்வேத நிறுவகத்தின் பணிப்பாளருக்குப் பதிலாக 2019.11.01 ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் தகுதிவாய்ந்த அதிகாரியாக (ஓய்வுபெற்ற) மேஜர் ஜெனரல் ஹேரத் முதியன்சலாகே உதய பண்டார ஹேரத் அவர்களை நியமித்தல் தொடர்பில் நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 நவம்பர் 07 ஆம் திகதிய 2148/34 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(vii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 20(4)(ஆ) ஆம் பிரிவின் கீழ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்குப் பதிலாக 2019.11.07 ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் தகுதிவாய்ந்த அதிகாரியாக எமிரிடஸ் பேராசிரியர் கதிர்காமநாதன் கந்தசாமி அவர்களை நியமித்தல் தொடர்பில் நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 நவம்பர் 07 ஆம் திகதிய 2148/35 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(viii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 20(4)(ஆ) ஆம் பிரிவின் கீழ் மொறட்டுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப நிறுவகத்தின் பணிப்பாளருக்குப் பதிலாக 2019.11.15 ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் தகுதிவாய்ந்த அதிகாரியாக (ஓய்வுபெற்ற) மேஜர் ஜெனரல் சாந்தகுமார் திருநாவுக்கரசு அவர்களை நியமித்தல் தொடர்பில் நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 நவம்பர் 07 ஆம் திகதிய 2148/36 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) உயர் பதவிகள் பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ கரு ஜயசூரிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) இலங்கையில் தேசிய மதிப்பீட்டு ஆற்றல்களை உறுதிப்படுத்துவதற்கு ஆய்வுகளை மேற்கொண்டு அதன் விதப்புரைகளை பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற விசேட குழுவின் இடைக்கால அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii) கமத்தொழில் மற்றும் காணி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ விஜித ஹேரத் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iv) வியாபாரம் மற்றும் வணிகம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(v) அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ எம்.ஏ. சுமந்திரன் அவர்களுக்கு பதிலாக கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(vi) தேசியப் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ மலித் ஜயதிலக அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(vii) கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கைகள் அக்குழுவின் தவிசாளர் கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திலிருந்து விலகுதல் தொடர்பான கூற்றொன்றினை வெளிநாட்டு உறவுகள் அமைச்சர், திறன்கள் அபிவிருத்தி, தொழில்துறை மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்கள் முன்வைத்தார்.
ஒத்திவைப்புப் பிரேரணை
“ஸ்ரீ லங்கன் விமான சேவையின் எயார்பஸ் கொடுக்கல் வாங்கல்” பற்றிய ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ நலின் பண்டார ஜயமஹ அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1925 மணியளவில் பாராளுமன்றமானது 2020 மார்ச் 03ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks