பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் -
• 2013 ஆம் நிதி ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் மூன்றாவது தொகுதியின் XI ஆம் பகுதியையும்;
• 2016 ஆம் நிதி ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் XVI ஆம் பகுதியையும்;
• 2017 ஆம் நிதி ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXV ஆம் பகுதியையும், மூன்றாவது தொகுதியின் XI ஆம் பகுதியையும், ஒன்பதாவது தொகுதியின் XII, XIII, XIV மற்றும் XV ஆம் பகுதிகளையும்;
• 2018 ஆம் நிதி ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXIII மற்றும் XXIV ஆம் பகுதிகளையும் மூன்றாவது தொகுதியின் XII ஆம் பகுதியையும், ஒன்பதாவது தொகுதியின் X, XI மற்றும் XII ஆம் பகுதிகளையும்; மற்றும்
• 2020 ஆம் நிதி ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் எட்டாவது தொகுதியின் II ஆம் பகுதி
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2017 ஆம் ஆண்டுக்கான தேசிய ஆராய்ச்சி மன்றத்தின் ஆண்டறிக்கை
(ii) 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளுக்கான பனை அபிவிருத்திச் சபையின் ஆண்டறிக்கைகள்
(iii) மருத்துவக் கட்டளைச் சட்டத்தின் (105 ஆம் அத்தியாயமான) 72 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 19(உ) பிரிவின் கீழ், சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2018 சனவரி 26 ஆம் திகதிய 2055/54 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் மற்றும் அவ்வொழுங்குவிதிகளை திருத்தும் பொருட்டு சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 திசெம்பர் 26 ஆம் திகதிய 2155/15 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(iv) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2019.06.21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடரின் மூன்றாவது அறிக்கையில் மத்திய மாகாண உள்ளூராட்சி நிறுவனங்களின் 2017 ஆம் ஆண்டின் செயலாற்றுகை தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ எம்.ஏ. சுமந்திரன் அவர்களுக்குப் பதிலாக கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) சுகாதாரம் மற்றும் மனித சேமநலம், சமூக வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ மயில்வாகனம் திலகராஜா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii) உற்பத்திகளும் சேவைகளும் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ சுஜித் சஞ்ஜய பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iv) தேசியப் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ மலித் ஜயதிலக அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(v) கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ சஜித் பிரேமதாஸ
பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்களின் அதிகரிப்பு
மேற்சொன்ன வினாவிற்கு மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் மற்றும் உள்ளக வர்த்தக, உணவுப் பாதுகாப்பு மற்றும் பாவனையாளர் நலனோம்புகை அமைச்சர் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ சமல் ராஜபக்ஷ அவர்கள் பதிலளித்தார்.
(ii) கௌரவ அநுர திசாநாயக்க
பழைய மற்றும் புதிய பாடத்திட்டங்களின் கீழ் 2019 (உ/த) மாணவர்களுக்கான பல்கலைக்கழக அனுமதி
மேற்சொன்ன வினாவிற்கு தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மற்றும் உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன அவர்கள் பதிலளித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
இலங்கை சுற்றாடலியல் தொழில் வல்லுநர்கள் நிறுவகம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1ஆம் இலக்க விடயமாகக் காணப்படும்)
சபையினால் நிறைவேற்றப்பட்டது.
ஒத்திவைப்புப் பிரேரணை
“இலங்கை மத்திய வங்கியினால் திறைசேரி முறிகளை வழங்குதல் தொடர்பான தடயவியல் கணக்காய்வு அறிக்கை” தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் தொடரப்பட்டது.
அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றமானது 2020 பெப்ரவரி 20ஆம் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks