பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’: “இலங்கை சுற்றாடலியல் தொழில் வல்லுநர்கள் நிறுவகம் (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றவுள்ள மேலதிக உறுப்பினர்கள்
B: “ஸ்ரீ சாக்கியசிங்காராம விகாரஸ்த கார்யசாதக சங்விதான (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றவுள்ள மேலதிக உறுப்பினர்கள்
C: பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2018 ஆம் ஆண்டுக்கான பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை
(ii) 2018 ஆம் ஆண்டுக்கான இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் ஆங்கில பட்டப்பின்படிப்பு நிறுவகத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும்
(iii) 2013/2014 மற்றும் 2014/2015 ஆம் ஆண்டுகளுக்கான மாந்தை சோல்ட் லிமிற்றெற்றின் வருடாந்த அறிக்கைகளும் கணக்குகளும்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) போக்குவரத்து மற்றும் தொலைத் தொடர்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ லசந்த அலகியவன்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) சட்ட விவகாரம் (ஊழலுக்கெதிரான) மற்றும் ஊடகத்துறை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ அஜித் பி. பெரேரா அவர்களுக்கு பதிலாக கௌரவ விஜித ஹேரத் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii) கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க அவர்களுக்கு பதிலாக கௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) ஊனமுற்றோர் சமூகம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் தொடர்பாக 2020.02.06 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கௌரவ சஜித் பிரேமதாஸ அவர்கள் எழுப்பிய வினாவிற்கு மகளீர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சர் கௌரவ (திருமதி) பவித்ராதேவி வன்னிஆரச்சி அவர்கள் பதிலளித்தார்.
(ii) ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸில் நிலவும் ஊழல்கள் தொடர்பாக 2020.02.06 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கௌரவ அநுர திசாநாயக்க அவர்கள் எழுப்பிய வினாவிற்கு கைத்தொழில் ஏற்றுமதி மற்றும் முதலீட்டு மேம்பாடு அமைச்சர் மற்றும் சுற்றுலா மற்றும் விமானச் சேவைகள் அமைச்சர், கௌரவ பிரசன்ன ரணதுங்க அவர்கள் பதிலளித்தார்.
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க, துறைமுக, விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தைத் திருத்துவதற்காக
“துறைமுக, விமானநிலைய அபிவிருத்தி அறவீடு (திருத்தம்)”
எனும் சட்டமூலத்தினை பாராளுமன்றச் சபை முதல்வர் பிரேரித்தார்.
அனுதாபப் பிரேரணைகள்
பின்வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைகள் மீது பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டன:-
(i) மறைந்த கௌரவ சீ. நந்தா மெத்தியூ
(ii) மறைந்த கௌரவ (டாக்டர்) ரஞ்சித் அத்தபத்து
(iii) மறைந்த கௌரவ பிரின்ஸ் காசிநாதர்
(iv) மறைந்த கௌரவ எம். எஸ். தேமிஸ்
அதனையடுத்து, 1511 மணியளவில் பாராளுமன்றமானது 2020 பெப்ரவரி 18ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks