E   |   සි   |  

2020 பெப்ரவரி 05ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


புதிய உறுப்பினர்களின்  உறுதிப்பிரமாணம் அல்லது சத்தியப்பிரமாணம்

கௌரவ (கலாநிதி) ஜயம்பதி விக்ரமரத்ன அவர்களின் இராஜினமா காரணமாக ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக கெளரவ வெலிகொடகே சமன் ரத்னபிரிய சில்வா அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக கெளரவ சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’: பின்னிணைப்புகளுடனான மத்திய வங்கியின் தடயவியல் கணக்காய்வு அறிக்கையின் கடினப் பிரதிகள் தொடர்பானது
B: அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
C: அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
D: அரசாங்க நிதி பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
E: சட்ட விவகாரம் (ஊழலுக்கெதிரான) மற்றும் ஊடகத்துறை பற்றிய குழுவில் செயலாற்றவுள்ள மேலதிக உறுப்பினர்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2018 ஆம் ஆண்டுக்கான இலங்கை விவசாய ஆராய்ச்சிக் கொள்கைச் சபையின் வருடாந்த அறிக்கை
(ii)    2018 ஆம் ஆண்டுக்கான இலங்கை துறைமுக அதிகாரசபையின் ஆண்டறிக்கை
(iii)    2018 ஆம் ஆண்டுக்கான இலங்கை பிக்கு பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்
(iv)    2018 ஆம் ஆண்டுக்கான மானிடவியல் மற்றும் சமூக விஞ்ஞானத்தில் உயர் கல்விக்கான தேசிய நிலையத்தின் ஆண்டறிக்கை
(v)    2018 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவப் பட்டப்பின்படிப்பு நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(vi)    2018 ஆம் ஆண்டுக்கான கொழும்புப் பல்கலைக்கழக, மனிதவள மேம்பாட்டு நிறுவகத்தின் ஆண்டறிக்கை மற்றும் வருடாந்த கணக்குகள்
(vii)    2018 ஆம் ஆண்டுக்கான இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை
(viii)    2018 ஆம் ஆண்டுக்கான கொழும்பு பல்கலைக்கழக தேசிய நூலகம் மற்றும் தகவல் விஞ்ஞான நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(ix)    2018 ஆம் ஆண்டுக்கான கொழும்புப் பல்கலைக்கழக கமத்தொழில் தொழில்நுட்பவியல் மற்றும் கிராமிய விஞ்ஞானங்களுக்கான நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(x)    2018 ஆம் ஆண்டுக்கான மருத்துவப் பட்டப்பின் படிப்பு நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை
(xi)    2018 ஆம் ஆண்டுக்கான றுஹுண பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை
(xii)   2018 ஆம் ஆண்டுக்கான இலங்கை களனிப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்
(xiii)    2013/2014, 2014/2015 மற்றும் 2015/2016 ஆம் ஆண்டுகளுக்கான  வரையறுக்கப்பட்ட பீ.சீ.சீ கம்பனியின் ஆண்டறிக்கைகள்

(xiv)    2018 ஆம் ஆண்டுக்கான நன்னடத்தை, சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை

(xv)    2019 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2019.12.01 முதல் 2019.12.31 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் குறைநிரப்பு உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு
(xvi)    2015 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க, தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின்  3(ஓ) பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 142 ஆம் பிரிவின் கீழ்  மருத்துவகப் பரீட்சிப்புகள் தொடர்பில் சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 ஒக்டோபர் 14 ஆம் திகதிய 2145/2 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xvii)    2015 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க, தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின்  118 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 142 ஆம் பிரிவின் கீழ்  விலையிடல் தொடர்பில் சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 ஒக்டோபர் 21 ஆம் திகதிய 2146/3 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xviii)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2019.06.21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடரின் மூன்றாவது அறிக்கையில் விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் 2017 ஆம் ஆண்டின் செயலாற்றுகை தொடர்பில்  குறிப்பிடப்பட்ட  விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xix)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 20(4)(ஆ) ஆம் பிரிவின்  கீழ் கட்புல மற்றும் அரங்கேற்றற் கலைக்கான பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்குப் பதிலாக 2019.09.24 ஆம் திகதி  நடைமுறைக்கு வரும் வகையில் தகுதிவாய்ந்த அதிகாரியாக திரு. பி. அசோக கீர்த்தி டீ சில்வா அவர்களை நியமித்தல் தொடர்பில் நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு,   2019 செப்டெம்பர் 24 ஆம் திகதிய 2142/25 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xx)        1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 20(4)(ஆ) ஆம் பிரிவின் கீழ் மொறட்டுவ பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் பணிப்பாளருக்குப் பதிலாக 2020.01.01 ஆம் திகதி  நடைமுறைக்கு வரும் வகையில் தகுதிவாய்ந்த அதிகாரியாக கலாநிதி திரு. நவரத்தினகே சுனில் ஜெயந்த நவரத்தின அவர்களை நியமித்தல் தொடர்பிலும் 2019 நவம்பர் 07 ஆம் திகதிய 2148/36 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டதுமான கட்டளையினை ஒழிக்கும் பொருட்டும் உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சரால் ஆக்கப்பட்டு,   2020 சனவரி 03 ஆம் திகதிய 2156/28 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xxi)    1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் 14 (2) ஆம் பிரிவின் கீழ் செஸ் வரி தொடர்பில் அபிவிருத்தி உபாயமுறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 ஒக்டோபர் 02 ஆம் திகதிய 2143/17 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி பற்றிய துறைசார்  மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.

(ii)    போக்குவரத்து  மற்றும் தொலைத்  தொடர்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை குழுவின் தவிசாளருக்கு பதிலாக கௌரவ லசந்த அலகியவன்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


பிரதம அமைச்சரிடம் கேட்கப்பட்ட வினாக்கள்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் நான்கு வினாக்கள் கேட்கப்பட்டன:-

(i)    கௌரவ அநுராத ஜயரத்ன
(ii)    கௌரவ லக்ஷ்மன் கிரிஎல்ல
(iii)    கௌரவ  இ. சாள்ஸ் நிர்மலநாதன்
(iv)    கௌரவ அநுர திசாநாயக்க


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ சஜித் பிரேமதாஸ

புதிய கொரோனா வைரஸ் பரவுவது குறித்து அரசாங்கம் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

மேற்சொன்ன வினாவிற்கு மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சர் கௌரவ (திருமதி) பவித்ராதேவி வன்னிஆரச்சி அவர்கள் பதிலளித்தார்.


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

நாட்டின் நிதி நிலைமைகள் தொடர்பான கூற்றொன்றினை பிரதம அமைச்சர் மற்றும் நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர், புத்தசாசன, கலாசார மற்றும் சமய அலுவல்கள் அமைச்சர் மற்றும் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சர், கௌரவ மஹிந்த ராஜபக்‌ஷ அவர்கள் முன்வைத்தார்.


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

கௌரவ பாராளுமன்ற சபை முதவர் பின்வரும் சட்டமூலங்களை பிரேரித்தார்-

(i)    நாட்டைக் கட்டியெழுப்புதல் வரி (திருத்தம்) - 2009 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க, நாட்டைக் கட்டியெழுப்புதல் வரிச் சட்டத்தைத் திருத்துவதற்கானது
(ii)    பொருளாதாரச் சேவை விதிப்பனவு (திருத்தம்) - 2006 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, பொருளாதாரச் சேவை விதிப்பனவுச் சட்டத்தைத் திருத்துவதற்கானது


பாராளுமன்றச் சபை முதல்வர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணையை சபை ஏற்றுக் கொண்டது-

சட்டவாக்க நிலையியற் குழு

நிலையியற் கட்டளை 113 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல் சட்டவாக்க நிலையியற் குழுவானது தவிசாளராக பிரதிச் சபாநாயகரையும் குழுக்களின் பிரதித் தவிசாளர் உட்பட தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்ட வேறு பதின்நான்கு (14) உறுப்பினர்களையும் கொண்டிருக்குமாக.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

(i)    கெளரவ எஸ்.எம். மரிக்கார் அவர்களுக்கு “இலங்கை இயன்மருத்துவச் சங்கத்தைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்” இனை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 52(6) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.

(ii)    கெளரவ (டாக்டர்) (திருமதி) துஸிதா விஜேமான்ன அவர்களுக்கு “காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டம் (அத்தியாயம் 464) ஐத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்” இனை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 52(6) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் சுற்றாடல் மற்றும் வனசீவராசிகள் வளங்கள் அமைச்சர் மற்றும் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1ஆம் இலக்க விடயமாகக் காணப்படும்)

சபையினால் அங்கீகரிக்கப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“பெருந்தோட்டக் கைத்தொழில் துறையின் உரிமையினை சிறிய தொழில்முயற்சிகளுக்கு வழங்குதல்” தொடர்பாக ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ மயில்வாகனம் திலகராஜா அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1848 மணியளவில் பாராளுமன்றமானது 2020 பெப்ரவரி 6ஆம் திகதி வியாழக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks