பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’: பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் செயலாற்றவுள்ள மேலதிக உறுப்பினர்
‘B’ : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு மற்றும் தெரிவுக் குழு ஆகியவற்றின் கூட்டங்கள்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
(i) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் -
• 2016 ஆம் நிதி ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் XV ஆம் பகுதியையும்;
• 2017 ஆம் நிதி ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXIV ஆம் பகுதியையும், மூன்றாவது தொகுதியின் X ஆம் பகுதியையும்;
• 2018 ஆம் நிதி ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXII ஆம் பகுதியையும், மூன்றாவது தொகுதியின் XI ஆம் பகுதியையும்; மற்றும்
• 2020 ஆம் நிதி ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் எட்டாவது தொகுதியின் I ஆம் பகுதியையும் மற்றும் பத்தாவது தொகுதியின் I ஆம் மற்றும் IV பகுதிகள்
(ii) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 41ஆ(6) உறுப்புரையின் பிரகாரம், 2019 ஆம் நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டுகளுக்கான (2019.07.01 - 2019.09.30) நிதி ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ அநுர திசாநாயக்க
பல்கலைக்கழக தொழில்நுட்பக் கல்லூரிகளிலுள்ள பிரச்சினைகள்
மேற்சொன்ன வினாவிற்கு தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மற்றும் உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன அவர்கள் பதிலளித்தார்.
பாராளுமன்றச் சபை முதல்வர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணைகளை சபை ஏற்றுக் கொண்டது-
(i) அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள்
தரப்பட்டுள்ள இருபத்தொன்பது (29) அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள் பெயர் குறிப்பிட்டு நியமிக்கப்படுமாக:-
1. பாதுகாப்பு பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
2. நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
3. புத்தசாசன, கலாசார மற்றும் சமய அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
4. நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
5. மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
6. உள்ளக வர்த்தக, உணவுப் பாதுகாப்பு மற்றும் பாவனையாளர் நலனோம்புகை பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
7. நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்திருத்தங்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
8. வெளிநாட்டு உறவுகள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
9. திறன்கள் அபிவிருத்தி, தொழில்துறை மற்றும் தொழில் உறவுகள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
10. வீதி மற்றும் நெடுஞ்சாலைகள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
11. துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
12. போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவம் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
13. மின்சக்தி மற்றும் வலுசக்தி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
14. சமுதாய வலுவூட்டல்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
15. மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பு பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
16. சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய சேவைகள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
17. கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
18. தகவல் மற்றும் வெகுசன ஊடாகம் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
19. உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
20. பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
21. கல்வி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
22. விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
23. சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறை மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
24. கைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவம் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
25. சுற்றாடல் மற்றும் வனசீவராசிகள் வளங்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
26. காணி மற்றும் காணி அபிவிருத்தி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
27. பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் ஏற்றுமதிக் கமத்தொழில் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
28. கைத்தொழில் ஏற்றுமதி மற்றும் முதலீட்டு மேம்பாடு பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
29. சுற்றுலா மற்றும் விமானச் சேவைகள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 112 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், ஆலோசனைக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்ட விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, ஒவ்வோர் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவும், அமைச்சரவையின் உரிய விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரவை அமைச்சரை அதன் தவிசாளராகவும், அதன் இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் உட்பட தெரிவுக் குழுவினால் நியமிக்கப்படும் வேறு ஏழு (07) உறுப்பினர்களையும் கொண்டிருக்குமாக.
ஒவ்வொரு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினதும் கூட்ட நடப்பெண் மூன்று (03) உறுப்பினர்களாக இருத்தல் வேண்டும்.
(ii) அரசாங்க நிதி பற்றிய குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 121 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், அரசாங்க நிதி பற்றிய குழுவானது, தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்ட பதின்மூன்று (13) உறுப்பினர்களையும் கொண்டிருக்குமாக.
அனுதாபப் பிரேரணைகள்
காலஞ் சென்ற கௌரவ ரீ. ரஞ்சித் த சொய்சா, பா.உ. அவர்களுக்கான அனுதாபப் பிரேரணை தொடர்பாக பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டது.
அதனையடுத்து, 1548 மணியளவில் பாராளுமன்றமானது 2020 பெப்ரவரி 5ஆம் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks