பார்க்க

E   |   සි   |  

2020 ஜனவரி 22ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

கௌரவ (கலாநிதி) ஜயம்பதி விக்ரமரத்ன, பா.உ. அவர்களின் இராஜினமாக் கடிதம்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

வலுவாதார அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ சந்தித் சமரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ சஜித் பிரேமதாஸ

மனித மற்றும் யானை மோதல்

மேற்சொன்ன வினாவிற்கு சுற்றாடல் மற்றும் வனசீவராசிகள் வளங்கள் அமைச்சர் மற்றும் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் கௌரவ எஸ்.எம். சந்திரசேன அவர்கள் பதிலளித்தார்.


பாராளுமன்றச் சபை முதல்வர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணைகளை சபை ஏற்றுக் கொண்டது-

(i)    பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 115 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல் தவிசாளராகச் சபாநாயகரையும், பிரதிச் சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர், பாராளுமன்றச் சபை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கக் கட்சியின் முதற்கோலாசான், எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் உட்பட தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் வேறு இருபத்து நான்கு (24) உறுப்பினர்களையும் கொண்டிருக்குமாக

(ii)    உயர் பதவிகள் பற்றிய குழு

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 124(1) இன் ஏற்பாடுகளினாலும், 2019 யூலை 12 ஆம் திகதி  பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேணைகளினாலும் தடைபெறாமல், 2020 சனவரி 21 ஆம் திகதி தெரிவுக் குழுவினால் தீர்மானிக்கப்பட்டவாறு உயர் பதவிகள் பற்றிய குழுவானது தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் இருபத்தைந்து (25) பாராளுமன்ற உறுப்பினர்கைளக் கொண்டிருக்குமாக


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

தொழில் அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் மூன்று ஒழுங்குவிதிகள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 3 வரையான விடயங்களாகக் காணப்படும்)

சபையினால் அங்கீகரிக்கப்பட்டன.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“நாட்டின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார  நிலைமை” தொடர்பாக ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ விஜேபால ஹெட்டிஆரச்சி அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1927 மணியளவில் பாராளுமன்றமானது 2020 ஜனவரி 23ஆம் திகதி வியாழக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks