பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
மத்திய வங்கியின் தடயவியல் கணக்காய்வு அறிக்கையை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்தல்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2016 ஆம் ஆண்டுக்கான நகர அபிவிருத்தி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை
(ii) 2017 ஆம் ஆண்டுக்கான இலங்கை கொள்கைக் கற்கைகள் நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை
(iii) 2016 ஆம் ஆண்டுக்கான தேசிய கால்நடை வளங்கள் அபிவிருத்திச் சபையின் வருடாந்த அறிக்கை
(iv) 2018.03.01 முதல் 2018.10.26 வரையிலான காலப்பகுதிக்கான அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவினால் 2019.10.23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடரின் மூன்றாவது அறிக்கையில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 120(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(v) 2019 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2019.11.01 முதல் 2019.11.30 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் குறைநிரப்பு உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு
(vi) 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் உற்பத்தி வரி தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 யூலை 10 ஆம் திகதிய 2131/29 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(vii) 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் உற்பத்தி வரி தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 ஆகஸ்ட் 9 ஆம் திகதிய 2135/55 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(viii) 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் உற்பத்தி வரி தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 ஆகஸ்ட் 10 ஆம் திகதிய 2135/68 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(ix) 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் உற்பத்தி வரி தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 ஒக்டோபர் 14 ஆம் திகதிய 2145/12 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(x) 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் உற்பத்தி வரி தொடர்பில் நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 திசெம்பெர் 1 ஆம் திகதிய 2151/60 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xi) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 20(4)(ஆ) ஆம் பிரிவின் கீழ் கம்பஹா விக்கிரமாராச்சி ஆயுர்வேத நிறுவகத்தின் பணிப்பாளருக்குப் பதிலாக 2019.08.01 ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் தகுதிவாய்ந்த அதிகாரியாக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஹேரத் முதியன்சலாகே உதய பண்டார ஹேரத் அவர்களை நியமித்தல் தொடர்பில் நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 ஆகஸ்ட் 23 ஆம் திகதிய 2137/96 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 20(4)(ஆ) ஆம் பிரிவின் கீழ் கட்புல மற்றும் அரங்கேற்றற் கலைக்கான பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்குப் பதிலாக 2019.12.13 ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் தகுதிவாய்ந்த அதிகாரியாக எமிரிடஸ் பேராசிரியர் வீரக்கோன் முதியன்செலாகே அபயரத்ன பண்டார அவர்களை நியமித்தல் தொடர்பிலும் 2019 செப்டெம்பர் 24 ஆம் திகதிய 2142/25 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டதுமான கட்டளையினை ஒழிக்கும் பொருட்டும் உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 திசெம்பர் 13 ஆம் திகதிய 2153/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xiii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 20(4)(ஆ) ஆம் பிரிவின் கீழ் கம்பஹா விக்கிரமாராச்சி ஆயுர்வேத நிறுவகத்தின் பணிப்பாளருக்குப் பதிலாக 2019.12.13 ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் தகுதிவாய்ந்த அதிகாரியாக சிரேஸ்ட பேராசிரியர் ஜனித அபேவிக்ரம லியனகே அவர்களை நியமித்தல் தொடர்பிலும் 2019 நவம்பர் 7 ஆம் திகதிய 2148/34 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டதுமான கட்டளையினை ஒழிக்கும் பொருட்டும் உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 திசெம்பர் 13 ஆம் திகதிய 2153/20 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
வலுவாதார அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ சந்தித் சமரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ சஜித் பிரேமதாஸ
பட்டதாரிகளின் தொழில்வாய்ப்பின்மை
மேற்சொன்ன வினாவிற்கு பொருளாதார மற்றும் கொள்கைகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கௌரவ டபிள்யு.டி.ஜே. செனவிரத்ன அவர்கள் பதிலளித்தார்.
(ii) கௌரவ அநுர திசாநாயக்க
முன்மொழியப்பட்ட மில்லேனியம் செலஞ்ச் கோர்பரேஷன் (எம்.சி.சி) ஒப்பந்தம்
மேற்சொன்ன வினாவிற்கு வெளிநாட்டு உறவுகள் அமைச்சர், திறன்கள் அபிவிருத்தி, தொழில்துறை மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் மற்றும் பாராளுமன்றச் சபை முதல்வர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்கள் பதிலளித்தார்.
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
அரசதுறை ஊழியர்கள் மீதான பழிவாங்கல் தொடர்பாக 2020.01.08 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கௌரவ சஜித் பிரேமதாஸ அவர்கள் எழுப்பிய வினாவிற்கு வெளிநாட்டு உறவுகள் அமைச்சர், திறன்கள் அபிவிருத்தி, தொழில்துறை மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் மற்றும் பாராளுமன்றச் சபை முதல்வர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்கள் பதிலளித்தார்.
பாராளுமன்றச் சபை முதல்வர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணைகளை சபை ஏற்றுக் கொண்டது-
(i) தெரிவுக் குழு
பாராளுமன்றத்தின் 114 ஆவது நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளினால் தடைபெறாமல் தெரிவுக் குழுவானது தவிசாளராக சபாநாயகரையும் ஒவ்வோர் அமர்வுத்தொடரினதும் தொடக்கத்தில் பாராளுமன்றத்தினால் பெயர் குறித்து நியமிக்கப்படவேண்டிய அரசியல் கட்சிகளின் தலைவர்களையோ அல்லது அவர்களின் நியமத்தர்களையோ உள்ளடக்கிய பதினேழு (17) உறுப்பினர்களையும் கொண்டிருக்குமாக
(ii) தெரிவுக்குழு
இன்றைய தினம் பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையின் பிரகாரம் பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட அங்கத்துவ உறுப்பினர்களுக்கு மேலதிகமாக பின்வரும் பதினேழு (17) உறுப்பினர்களும் தற்போதைய கூட்டத்தொடரின் தெரிவுக்குழுவில் சேவையாற்றுவார்களாக:-
கௌரவ சமல் ராஜபக்ஷ
கௌரவ நிமல் சிறிபால த சில்வா
கௌரவ தினேஷ் குணவர்தன
கௌரவ ஜோன்ஸ்டன் பர்னாந்து
கௌரவ டக்ளஸ் தேவானந்தா
கௌரவ மஹிந்த சமரசிங்ஹ
கௌரவ காமினி லொக்குகே
கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன
கௌரவ ரோஹித அபேகுணவர்தன
கௌரவ லக்ஷ்மன் கிரிஎல்ல
கௌரவ ஜோன் அமரதுங்க
கௌரவ விஜித ஹேரத்
கௌரவ றிஸாட் பதியுதீன்
கௌரவ பாட்டளி சம்பிக ரணவக்க
கௌரவ மனோ கணேசன்
கௌரவ நிரோஷன் பெரேரா
கௌரவ மாவை சோ. சேனாதிராசா
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ (வண.) அதுரலியே ரதன தேரர் அவர்களுக்கு “1952 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க, கண்டிய விவாகம், மணநீக்கச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்” இனை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிலையியற் கட்டளை 52(6) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
கடற்றொழில் நீரியல் வளங்கள் சட்டத்தின் கீழ் ஒன்பது ஒழுங்குவிதிகள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 9 வரையான விடயங்களாகக் காணப்படும்)
சபையினால் அங்கீகரிக்கப்பட்டன.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“2020 ஆம் ஆண்டுக்கான தரம் 1 பாடசாலை அனுமதி” தொடர்பாக ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ நிஹால் கலப்பத்தி அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1918 மணியளவில் பாராளுமன்றமானது 2020 ஜனவரி 22ஆம் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks