பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ செல்வம் அடைக்கலநாதன், குழுக்களின் பிரதித் தவிசாளர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம்-
• 2017 ஆம் நிதி ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் நான்காவது தொகுதியின் IX ஆம் பகுதியையும்;
• 2018 ஆம் நிதி ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் IX, X, XI, XII, XIII, XIV, XV மற்றும் XVI பகுதிகளையும் இரண்டாவது தொகுதியின் V, VI, VII, VIII, IX, X, XI, XII, XIII, XIV மற்றும் XV ஆம் பகுதிகளையும், மூன்றாவது தொகுதியின் III, IV, V மற்றும் VI ஆம் பகுதிகளையும், நான்காவது தொகுதியின் I மற்றும் II ஆம் பகுதிகளையும், ஐந்தாவது தொகுதியின் III மற்றும் IV ஆம் பகுதிகளையும், ஆறாவது தொகுதியின் II, III, IV, V, VI, VII மற்றும் VIII பகுதிகளையும், ஒன்பதாவது தொகுதியின் II, III, IV மற்றும் V ஆம் பகுதிகளையும்; மற்றும்
• 2019 ஆம் நிதி ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் பத்தாவது தொகுதியின் XIII ஆம் பகுதி
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் 4(3) மற்றும் 14 ஆம் பிரிவுகளுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ், நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 திசெம்பர் 06 ஆம் திகதிய 2152/63 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(ii) 2005ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க, சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டத்தின் மூலம் திருத்தப்பட்ட,2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, சேர் பெறுமதி வரி சட்டத்தின் 2அ ஆம் பிரிவின் கீழ் சேர்பெறுமதி வரி தொடர்பில் நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 நவம்பர் 29 ஆம் திகதிய 2151/52 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(iii) 2005ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க, சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டத்தின் மூலம் திருத்தப்பட்ட, 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, சேர் பெறுமதி வரி சட்டத்தின் 2அ ஆம் பிரிவின் கீழ் சேர்பெறுமதிவரி தொடர்பில் நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 திசெம்பர் 06 ஆம் திகதிய 2152/60 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(iv) 2018.03.01 முதல் 2018.10.26 வரையிலான காலப்பகுதிக்கான அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவினால் 2019.10.23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடரின் மூன்றாவது அறிக்கையில் இலங்கை துறைமுக அதிகாரசபை தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 120(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(v) 2018 ஆம் ஆண்டுக்கான ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயற்பாட்டு அறிக்கை
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ சஜித் பிரேமதாஸ
அரசதுறை ஊழியர்கள் மீதான பழிவாங்கல்
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
(i) கெளரவ (கலாநிதி) விஜயதாஸ ராஜபக்ஷ அவர்களுக்கு “1975 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க, சொத்துக்களையும் பொறுப்புக்களையும் வெளிப்படுத்தல் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்” இனை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிலையியற் கட்டளை 52(6) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர், புத்தசாசன, கலாசார மற்றும் சமய அலுவல்கள் அமைச்சர் மற்றும் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
கெளரவ (வண.) அதுரலியே ரதன தேரர் அவர்களுக்கு பின்வரும் சட்டமூலங்களை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
(ii) “1951 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, முஸ்லிம் திருமணம், மணநீக்கச் சட்டத்தை நீக்குதவற்கானதொரு சட்டமூலம்”
(iii) “1907 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க, விவாக (பொது) கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்”
நிலையியற் கட்டளை 52(6) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலங்கள் (ii) மற்றும் (iii) பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன.
கெளரவ (டாக்டர்) (திருமதி) துஸிதா விஜேமான்ன அவர்களுக்கு பின்வரும் சட்டமூலங்களை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
(iv) “திருமணப் பதிவு கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்”
(v) “இலங்கையில் திருமணத்திற்கான ஆகக்குறைந்த வயதை அறிமுகம் செய்வதற்கானதொரு சட்டமூலம்”
(vi) “சிவில் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (பிரிவு 627) ஐ திருத்துவதற்கானதொரு சட்டமூலம்”
நிலையியற் கட்டளை 52(6) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலங்கள் (iv) மற்றும் (v) பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருக்கும் சட்டமூலம் (vi) நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்திருத்தங்கள் அமைச்சருக்கும் ஆற்றுப்படுத்தப்பட்டன.
ஒத்திவைப்புப் பிரேரணை
“அதிமேதகு ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை” தொடர்பான ஒத்திவைக்கப்பட்ட விவாதம் தொடரப்பட்டது.
அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றமானது 2020 ஜனவரி 09ஆம் திகதி வியாழக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks