பார்க்க

E   |   සි   |  

2020 ஜனவரி 07ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

மத்திய வங்கியின் தடயவியல் கணக்காய்வு அறிக்கையை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்தல் தொடர்பாக சட்ட மா அதிபரின் ஆலோசனை


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2018 ஆம் ஆண்டுக்கான தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஆண்டறிக்கை
(ii)    2016 ஆம் ஆண்டுக்கான டவர் மண்டப அரங்க மன்றத்தின் ஆண்டறிக்கையும் நிதிசார் கூற்றும்
(iii)    2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை சேமிப்பு வங்கியின் ஆண்டறிக்கை
(iv)    2015 ஆம் ஆண்டுக்கான நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஆண்டறிக்கை
(v)    2018 ஆம் ஆண்டுக்கான இலங்கை உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(vi)    2016 ஆம் ஆண்டுக்கான இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் ஆண்டறிக்கை

(vii)    2018 ஆம் ஆண்டுக்கான தேசிய நூதனசாலைகள் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை

(viii)    2019 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2019.09.16 முதல் 2019.10.31 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் குறைநிரப்பு உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு
(ix)    2018.03.01 முதல் 2018.10.26 வரையிலான காலப்பகுதிக்கான அரசாங்க பொறுப்பு முயற்சிகள்  பற்றிய குழுவினால் 2019.10.23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடரின் மூன்றாவது அறிக்கையில்  தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தொடர்பில்  குறிப்பிடப்பட்ட  விடயங்கள் தொடர்பான  பாராளுமன்ற நிலையியற் கட்டளை 120(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


சிறப்புரிமைக் கேள்விகள்

கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே

தன்னைப் பற்றிய கௌரவ ரன்ஜன் ராமநாயக்க அவர்களின் தொலைபேசி உரையாடல்


ஒத்திவைப்புப் பிரேரணை

“அதிமேதகு ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ பந்துல லால் பண்டாரிகொட அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றமானது 2020 ஜனவரி 08ஆம் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks