பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
புதிய உறுப்பினர்களின் உறுதிப்பிரமாணம் அல்லது சத்தியப்பிரமாணம்
கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா அவர்களின் மரணம் காரணமாக ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக கெளரவ உடகம லியனகே வருண பிரியந்த லியனகே அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக கெளரவ சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
சனாதிபதியின் செய்திகள்
A: பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘B’ : சபை முதல்வர் மற்றும் அரசாங்க முதற்கோலாசான் நியமனங்கள்
‘C’ : எதிர்க்கட்சித் தலைவர் நியமனம்
‘D’ : எதிர்க்கட்சி முதற்கோலாசான் நியமனம்
‘E’ : கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா, பா.உ. அவர்களின் மரணம்
‘F’ : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
(i) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 41ஆ(6) உறுப்புரையின் மற்றும் 1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டத்தின் 30 ஆம் வாசகத்தின் பிரகாரம், 2017 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டு மற்றும் 2018 ஆம் ஆண்டின் முதலாம், இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் காலாண்டுகளுக்கான இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கைகள்;
(ii) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 41ஆ(6) உறுப்புரையின் பிரகாரம், 2017 ஆம் ஆண்டின் மூன்றாம் மற்றும் நான்காம் காலாண்டுகளுக்கான மற்றும் 2018 ஆம் ஆண்டுக்கான முதலாம், இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் காலாண்டுகளுக்கான இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கைகள்;
(iii) 2019 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்கான இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் தேர்தல் ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை; மற்றும்
(iv) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 41ஆ(6) உறுப்புரையின் பிரகாரம், 2019 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டுக்கான எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
பாராளுமன்ற சபை முதல்வரினால் முன்மொழியப்பட்ட பின்வரும் பிரேரணைகளை சபை ஏற்றுக் கொண்டது,
இலங்கையில் இன மற்றும் சமய சகவாழ்வை உறுதி செய்வதற்காக அது பற்றி ஆராய்ந்து தமது சிபாரிசுகளை பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற விசேட குழு
2018 செப்டெம்பர் 07 ஆம் திகதி சபாநாயகரால் நியமிக்கப்பட்ட இலங்கையில் இன மற்றும் சமய சகவாழ்வை உறுதி செய்வதற்காக அது பற்றி ஆராய்ந்து தமது சிபாரிசுகளை பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற விசேட குழு, தன்னால் அவதானிக்கப்பட்ட விடயங்களை 2018 செப்டெம்பர் 04 ஆம் திகதி பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பிரேரணை மூலமாக பணிக்கப்பட்ட கால எல்லைக்குள் பாராளுமன்றத்தில் இடைக்கால அறிக்கையின் மூலம் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், இறுதி அறிக்கையை முன்வைப்பதற்கு குறிப்பிட்ட தெரிகுழுவிற்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள கால எல்லை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 102 இன் பிரகாரம் 2020 ஜூலை 12 ஆம் திகதி வரை கால நீடிப்புச் செய்யப்படுமாக
அதனையடுத்து, 1330 மணியளவில் பாராளுமன்றமானது 2020 ஜனவரி 07ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks