பார்க்க

E   |   සි   |  

2019 ஒக்டோபர் 08ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சனாதிபதியின் செய்திகள்

A: பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘B’ :  அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல்
‘C’ :  கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க, பா.உ. அவர்களினது சிறப்புரிமை மீறப்பட்டதாக கேள்வி எழுப்பிய விடயம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2018 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவின் ஆண்டறிக்கை
(ii)   2017 ஆம் ஆண்டுக்கான ஆயுர்வேத வைத்திய சபையின் ஆண்டறிக்கை
(iii)  2016 - 2017 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ லங்கா ஸ்டேட் டிரேடிங் (ஜெனரல்) கோப்பரேசனின் ஆண்டறிக்கை
(iv)    20132014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளுக்கான லங்கா சதொச லிமிடெட்டின் ஆண்டறிக்கைகள்
(v)    2016 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழுவின் ஆண்டறிக்கை
(vi)    2017 ஆம் ஆண்டுக்கான ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(vii)    2017 ஆம் ஆண்டுக்கான இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் ஆண்டறிக்கை
(viii)    2016 ஆம் ஆண்டுக்கான தேசிய விஞ்ஞான மன்றத்தின் ஆண்டறிக்கை

(ix)    1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க, அத்தியாவசிய பொதுமக்கள் சேவை சட்டத்தின்  2 ஆம் பிரிவின் கீழ் பயணிகள் அல்லது பண்டங்களுக்கான அனைத்துப் பொதுப் போக்குவரத்துச் சேவைகளும் அத்தியாவசிய சேவைகள் என பிரகடனப்படுத்தல் தொடர்பில் சனாதிபதி அவர்களால் பிரகடனப்படுத்தப்பட்டு, 2019 ஒக்டோபர் 03 ஆம் திகதிய 2143/51 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை.
(x)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2019.06.21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடரின் மூன்றாவது அறிக்கையில் சனாதிபதி செயலகத்தின் 2017 ஆம் ஆண்டின் செயலாற்றுகை தொடர்பில்  குறிப்பிடப்பட்ட  விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4)  இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை.
(xi)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2019.06.21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடரின் மூன்றாவது அறிக்கையில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு, வனப் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் கரையோர பேணுகை மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவத் திணைக்களம் என்பனவற்றின் 2017 ஆம் ஆண்டின் செயலாற்றுகை தொடர்பில்  குறிப்பிடப்பட்ட  விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xii)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2019.06.21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடரின் மூன்றாவது அறிக்கையில் நீதிச்சேவை ஆணைக்குழு செயலகத்தின் 2017 ஆம் ஆண்டின் செயலாற்றுகை தொடர்பில்  குறிப்பிடப்பட்ட  விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xiii)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2019.06.21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடரின் மூன்றாவது அறிக்கையில் அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் 2017 ஆம் ஆண்டின் செயலாற்றுகை தொடர்பில்  குறிப்பிடப்பட்ட  விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xiv)    சமர்ப்பிக்கப்பட்ட எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடரின் மூன்றாவது அறிக்கையில் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சு, இலங்கை நில அளவைத் திணைக்களம், அரசாங்க அச்சுத் திணைக்களம், காணி பயன்பாட்டு கொள்கைத் திட்டமிடல் திணைக்களம், காணி ஆணையாளர் நாயகத்தின் திணைக்களம் மற்றும் காணி நிர்ணயத் திணைக்களம் என்பனவற்றின் 2017 ஆம் ஆண்டின் செயலாற்றுகை தொடர்பில்  குறிப்பிடப்பட்ட  விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xv)    (469 ஆம் அத்தியாயமான) தாவர, விலங்கினப் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2015 யூன் 22 ஆம் திகதிய 1920/3 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகள்
(xvi)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2019.06.21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடரின் மூன்றாவது அறிக்கையில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சு மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களம் என்பனவற்றின் 2017 ஆம் ஆண்டின் செயலாற்றுகை தொடர்பில்  குறிப்பிடப்பட்ட  விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xvii)    2019 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2019.07.15 முதல் 2019.09.15 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் குறைநிரப்பு உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு
(xviii)    2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 75(1)  ஆம் பிரிவின் கீழ்   இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு அரசாங்கத்திற்கும் ஓமான் சுல்தான் அரசாங்கத்திற்கும் இடையில் வருமானம் மீதான வரிகள் தொடர்பில் இரட்டை வரிவிதிப்பைத் தவிர்ப்பதற்கும் வரி செலுத்தாது தட்டிக் கழிப்பதனைத் தடுப்பதற்குமாக 2018 ஆகஸ்ட் 15 ஆம்  திகதி செய்துகொள்ளப்பட்ட  உடன்படிக்கை
(xix)    2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, நலன்புரி நன்மைகள் சட்டத்தின் 9  ஆம் பிரிவின் கீழ்   நலன்புரி நன்மைக் கொடுப்பனவுகளுக்கான குறைவருமானம் பெறும் குடும்பங்களை இனங்காண்பதற்கான செயன்முறை தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 செப்டெம்பர் 18 ஆம் திகதிய 2141/16 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை  மூலம் திருத்தப்பட்டவாறான  2019 யூன் 20 ஆம் திகதிய 2128/24 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட திட்டம்
(xx)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2019.06.21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடரின் மூன்றாவது அறிக்கையில் கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் 2017 ஆம் ஆண்டின் செயலாற்றுகை தொடர்பில்  குறிப்பிடப்பட்ட  விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை     119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xxi)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2019.06.21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடரின் மூன்றாவது அறிக்கையில் மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் உலர்வலய அபிவிருத்தி அமைச்சு மற்றும் நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புச் சேவைகள் திணைக்களம் என்பனவற்றின் 2017 ஆம் ஆண்டின் செயலாற்றுகை தொடர்பில்  குறிப்பிடப்பட்ட  விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகள்
(xxii)    2016 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (தாபித்தலும், நிருவகித்தலும், பணிகளை நிறைவேற்றுதலும்) சட்டத்தின் 12(ஊ) பிரிவின் கீழ் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரால் தேசிய ஆக்கப்பட்டு, 2019 யூலை 24 ஆம் திகதிய 2133/36 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட வழிகாட்டுநெறிகள்
(xxiii)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2019.06.21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடரின் மூன்றாவது அறிக்கையில் தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சின் 2017 ஆம் ஆண்டின் செயலாற்றுகை தொடர்பில்  குறிப்பிடப்பட்ட  விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xxiv)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2019.06.21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடரின் மூன்றாவது அறிக்கையில் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சின் 2017 ஆம் ஆண்டின் செயலாற்றுகை தொடர்பில்  குறிப்பிடப்பட்ட  விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xxv)    2017 ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு நிதியத்தின் ஆண்டறிக்கை.
(xxvi)    1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க,விளையாட்டுக்கள் சட்டத்தின் 31  ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 41 ஆம் பிரிவின் கீழ் தேசிய விளையாட்டுச் சங்கங்கள் தொடர்பில் தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 யூன் 18 ஆம் திகதிய 2128/8 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xxvii)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2019.06.21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடரின் மூன்றாவது அறிக்கையில் தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை  அமைச்சின் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரிவின் 2017 ஆம் ஆண்டின் செயலாற்றுகை தொடர்பில்  குறிப்பிடப்பட்ட  விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை     119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xxviii)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2019.06.21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடரின் மூன்றாவது அறிக்கையில் அபிவிருத்தி உபாயமுறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு மற்றும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களம் என்பனவற்றின் 2017 ஆம் ஆண்டின் செயலாற்றுகை   தொடர்பில்  குறிப்பிடப்பட்ட  விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xxix)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2019.06.21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடரின் மூன்றாவது அறிக்கையில் தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சு, தொழில் திணைக்களம் மற்றும் மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களம் என்பனவற்றின் 2017 ஆம் ஆண்டின் செயலாற்றுகை தொடர்பில்  குறிப்பிடப்பட்ட  விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகள்
(xxx)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2019.06.21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடரின் மூன்றாவது அறிக்கையில் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சின் 2017 ஆம் ஆண்டின் செயலாற்றுகை தொடர்பில்  குறிப்பிடப்பட்ட  விடயங்கள் தொடர்பான  பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    “இலங்கை நிர்மாணக் கைத்தொழில் சம்மேளனம் (கூட்டிணைத்தல்)” சட்டமூலம் பற்றிய சட்டவாக்க நிலையியற் குழுவின் அறிக்கையையும் கூட்ட அறிக்கையையும் அக்குழுவின் தவிசாளர் கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி அவர்களுக்குப் பதிலாக கௌரவ எட்வட் குணசேகர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ எம்.ஏ. சுமந்திரன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ எட்வட் குணசேகர                    
(ii)    கௌரவ கருணாரத்ன பரணவிதான                    
(iii)    கௌரவ நிஹால் கலப்பத்தி                   
(iv)    கௌரவ நாலக்க பிரசாத் கொலொன்னே        -    இரண்டு மனுக்கள்
(v)    கௌரவ சுஜித் சஞ்ஜய பெரேரா                   
(vi)    கௌரவ சந்தித் சமரசிங்க

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ ராஜவரோதயம் சம்பந்தன்

வண. மேதாலங்கார தேரரின் இறுதிக் கிரியை இராணுவ முகாமிற்குரிய வளாகத்திற்குள் தகனம் செய்வதற்கான நீதிமன்ற உத்தரவு


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

(i)    2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க, கம்பனிகள் சட்டத்தினைத் திருத்துவதற்காக

“கம்பெனிகள் (திருத்தம்)”

எனும் சட்டமூலத்தினை கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்டகாலமாக இடம்பெயர்ந்த நபர்களின் மீள்குடியேற்றம், கூட்டுறவுத்துறை அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.

(ii)    விளையாட்டுக்களில் ஆட்ட நிர்ணயம், ஊழல், சட்டவிரோதமான சூழ்ச்சித் திறனுடன் கையாளுதல் மற்றும் சட்டவிரோதமான பந்தயம் பிடித்தலைத் தடுப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும் தவறுகளைப் புலனாய்வு செய்வதற்காக விசேட புலனாய்வுகள் அலகொன்றை நியமிப்பதற்கும் அத்துடன் அவற்றுடன் தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநோ்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்தற்காக

“விளையாட்டுக்கள் தொடர்பான தவறுகளை தடுத்தல்”

எனும் சட்டமூலத்தினை அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் அவர்கள் பிரேரித்தார்.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ விஜேபால ஹெட்டிஆரச்சி அவர்களுக்கு “1986 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க, சர்வதேச லயன்ஸ் கழகம் மாவட்டம் 306ஏ-தேசிய அபிவிருத்தி மன்ற நம்பிக்கை நிதியம் (கூட்டிணைத்தல்) சட்டத்தைத் திருத்துவதற்கானாதொரு சட்டமூலம்” இனை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 52(6) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவலகள் அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2 ஆகிய விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டதுடன் 2ஆம் இலக்க விடயம் சட்டவாக்க நிலையியற் குழுவிற்கு ஆற்றப்படுத்தப்பட்டது:-<


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks