பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ செல்வம் அடைக்கலநாதன், குழுக்களின் பிரதித் தவிசாளர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2017 ஆம் ஆண்டுக்கான இலங்கை சம்மேளனப் பணியகத்தின் ஆண்டறிக்கை
(ii) 2018 ஆம் ஆண்டுக்கான உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(iii) 2018 ஆம் ஆண்டுகளுக்கான கடற்றொழில், நீரியல் வளங்கள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(iv) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2019.06.21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடரின் மூன்றாவது அறிக்கையில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் 2017 ஆம் ஆண்டின் செயலாற்றுகை தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பில் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(v) (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் 164 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 237 ஆம் பிரிவின் கீழ் சைகைகள், சமிக்ஞைகள், அடையாளங்கள் மற்றும் வீதிக் குறியீடுகள் தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 யூன் 18 ஆம் திகதிய 2128/9 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
பாராளுமன்ற நிலையியற் கட்டளை இல. 52(6) இன் கீழ் அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
பாராளுமன்ற நிலையியற் கட்டளை இல. 52(6) இன் பிரகாரம், “இலங்கை சுற்றாடலியல் தொழில் வல்லுநர்கள் நிறுவகம் (கூட்டிணைத்தல்)” சட்டமூலம் பற்றிய அறிக்கை கௌரவ அரசாங்கக் கட்சி முதற்கோலாசானினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன
(மனு பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ டக்ளஸ் தேவானந்தா
மன்னார் மாவட்டத்தில் வீடமைப்பு கருத்திட்டத்திற்கான நிதி உதவி
அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் கௌரவ கயந்த கருணாதிலக்க அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணையை சபை ஏற்றுக் கொண்டது-
சட்டவாக்க நிலையியற் குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 51(3)(ஆ) இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், 2019 யூன் 27 ஆம் திகதி சபாநாயகாினால் சட்டவாக்க நிலையியற் குழுவிற்கு ஆற்றப்படுத்தப்பட்ட, “ஊவா மாகாண சபையின் சுற்றுலா அபிவிருத்திப் பிரிவு வரைவு நியதிச்சட்டம்” மீதான அறிக்கையை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கான கால எல்லை 2019 நவெம்பர் மாதம் 29 ஆம் திகதி வரை நீடிக்கப்படுதல் வேண்டும்.
அனுதாபப் பிரேரணை
பாராளுமன்ற உறுப்பினர், காலஞ் சென்ற கௌரவ சந்திரசிறி கஜதீர அவர்களுக்கான அனுதாபப் பிரேரணை தொடர்பாக பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டது.
ஒத்திவைப்புப் பிரேரணை
“மனித வாழ்க்கை மற்றும் அவர்களின் உடைமைகள் மீது காட்டு யானைகளின் தாக்குதல்” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ செஹான் சேமசிங்க அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1706 மணியளவில் பாராளுமன்றமானது 2019 ஒக்டோபர் 08ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks