பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : “இலங்கை றுஹுணு பொருளாதார அபிவிருத்திக் கூட்டுத்தபானம்” எனும் சட்டமூலம் சம்பந்தமான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம்-
• 2016 ஆம் நிதி ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் நான்காவது தொகுதியின் XI ஆம் பகுதியையும் ஆறாவது தொகுதியின் XIX, XX, XXI மற்றும் XXII பகுதிகளையும் ;
• 2017 ஆம் நிதி ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் XXVI மற்றும் XXVII ஆம் பகுதிகளையும் நான்காவது தொகுதியின் VI ஆம் பகுதியையும் ஆறாவது தொகுதியின் IX, X, XI மற்றும் XII ஆம் பகுதிகளையும்; மற்றும்
• 2018 ஆம் நிதி ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் I ஆம் பகுதியையும், ஐந்தாவது தொகுதியின் I ஆம் பகுதி
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2017/18 ஆம் ஆண்டுக்கான களுபோவிட்டியான தேயிலைத் தொழிற்சாலை லிமிரெட்டின் ஆண்டறிக்கை
(ii) 2016 ஆம் ஆண்டுக்கான மீயுயர் நீதிமன்றக் கட்டடத் தொகுதி முகாமைச் சபையின் ஆண்டறிக்கை
(iii) 2014 ஆம் ஆண்டுக்கான தேசிய கல்வி நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(iv) 2018 ஆம் ஆண்டுக்கான மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(v) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2019.06.21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடரின் மூன்றாவது அறிக்கையில் அமைச்சரவை அலுவலகத்தின் 2017 ஆம் ஆண்டின் செயலாற்றுகை தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பில் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(vi) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2019.06.21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடரின் மூன்றாவது அறிக்கையில் போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சு, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் மற்றும் புகையிரதத் திணைக்களம் என்பனவற்றின் 2017 ஆம் ஆண்டின் செயலாற்றுகை தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பில் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
பின்வரும் சட்டமூலங்களை கௌரவ அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் அவர்கள் பிரேரித்தார்-
(i) காலவிதிப்பு (திருத்தம்) - (68 ஆம் அத்தியாயமான) காலவிதிப்புக் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்காக
(ii) நம்பிக்கைப்பொறுப்பு பற்றுச்சீட்டுகள் (திருத்தம்) - (86 ஆம் அத்தியாயமான) நம்பிக்கைப்பொறுப்பு பற்றுச்சீட்டுகள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்காக
பாராளுமன்றச் சபை முதல்வர் கௌரவ லக்ஷ்மன் கிரிஎல்ல அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணையை சபை ஏற்றுக் கொண்டது-
2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்கையின் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் பற்றி ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற விசேட குழு
2019 மே 22 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினால் நியமிக்கப்பட்ட, 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்கையின் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் பற்றி ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கான விசேட குழுவின் இறுதி அறிக்கையை முன்வைப்பதற்கு வழங்கப்பட்ட கால எல்லை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 102 இன் பிரகாரம் 2019 ஒக்டோபர் 31 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு இப்பாராளுமன்றம் அனுமதி வழங்குமாக.
இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் காணப்படும் "இலங்கை கணினிச் சங்கம் (கூட்டிணைத்தல்)" எனும் சட்டமூலம் சபையின் அனுமதியுடன் கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க அவர்களால் மீளபெறப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
வணிகக் கப்பற்றொழில் (திருத்தச்) சட்டமூலம்
திருத்தங்களுடன் சபையால் நிறைவேற்றப்பட்டது.
அதனையடுத்து, 1713 மணியளவில் பாராளுமன்றமானது 2019 செப்டெம்பர் 19ஆம் திகதி வியாழக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks