பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
2019 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டிற்கான (2019.01.01-2019.03.31) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் தேர்தல் ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2018 ஆம் ஆண்டுக்கான கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமை திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ii) 2017 ஆம் ஆண்டுக்கான கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iii) 2015 ஆம் ஆண்டுக்கான தேசிய கல்வி நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(iv) 2018 ஆம் ஆண்டுக்கான காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஆண்டறிக்கை
(v) 2016 ஆம் ஆண்டுக்கான இலங்கைக் கட்டளைகள் நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை
(vi) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (52 ஆம் அத்தியாயமான) 8 ஆம் மற்றும் 30 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் 32 ஆம் பிரிவின் கீழ் ஒட்டுத்துண்டு மற்றும் ஒட்டுத்துண்டு முகாமை தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 யூன் 20 ஆம் திகதிய 2128/30 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட விதிகள்
(மதுவரி அறிவித்தல் இலக்கம் 04/2019)
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) உள்ளக நிருவாகம் மற்றும் அரச முகாமைத்துவம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ காமினி லொக்குகே அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ எம்.ஏ. சுமந்திரன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ வாசுதேவ நாணாயக்கார - இரண்டு மனுக்கள்
(ii) கௌரவ அநுராத ஜயரத்ன
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பிரதம அமைச்சரிடம் கேட்கப்பட்ட வினாக்கள்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் நான்கு வினாக்கள் கேட்கப்பட்டன:-
(i) கௌரவ அனுர சிட்னி ஜயரத்ன
(ii) கௌரவ உதய பிரபாத் கம்மன்பில
(iii) கௌரவ இ. சாள்ஸ் நிர்மலநாதன்
(iv) கௌரவ பிமல் ரத்நாயக்க
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
(351 ஆம் அத்தியாயமான) குடிவருவோர், குடியகல்வோர் சட்டத்தைத் திருத்துவதற்காக
“குடிவருவோர், குடியகல்வோர் (திருத்தம்)”
எனும் சட்டமூலத்தினை கௌரவ அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் அவர்கள் பிரேரித்தார்.
பாராளுமன்றச் சபை முதல்வர் கௌரவ லக்ஷ்மன் கிரிஎல்ல அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணையை சபை ஏற்றுக் கொண்டது-
அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள்
2019 யூலை 09 ஆம் திகதி பாராளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையினால் தடைபெறாமல் 2019 ஆகஸ்ட் 23 ஆம் திகதி தெரிவுக் குழுவினால் தீர்மானிக்கப்பட்டவாறு பின்வரும் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்களின் பெயர்கள்,
• கமத்தொழில், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அபிவிருத்தி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவானது “கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அபிவிருத்தி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு” எனவும்; மற்றும்
• பொது நிருவாகம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவானது “பொது நிருவாகம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கால்நடை வளங்கள் அபிவிருத்தி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு” எனவும்;
மீளப் பெயரிடப்படுதல் வேண்டும்
ஒத்திவைப்புப் பிரேரணை
“மத்திய கலாசார நிதிய மோசடி” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ ரீ.பீ. ஏக்கநாயக்க அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1843 மணியளவில் பாராளுமன்றமானது 2019 செப்டெம்பர் 05ஆம் திகதி வியாழக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks