பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
2018 ஆம் ஆண்டுக்கான சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடருக்கான அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் இரண்டாவது அறிக்கை (ஸ்ரீலங்கன் விமானக் கம்பனி தொடர்பான) அக்குழுவின் தவிசாளர் கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ எம்.ஏ. சுமந்திரன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii) சுகாதாரம் மற்றும் மனித சேமநலம், சமூக வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ மயில்வாகனம் திலகராஜா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
கௌரவ நிஹால் கலப்பத்தி
(மனு பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
சிறப்புரிமைக் கேள்விகள்
கௌரவ சி. சிறீதரன்
பாதுகாப்பு படையினரால் தனது வீடு சோதனைக்கு உட்படல்
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
றுஹுணு அபிவிருத்தி இடப்பரப்பினுள் பொருளாதார அபிவிருத்திக் கருத்திட்டங்களையும், திட்டங்களையும், நிகழ்ச்சித்திட்டங்களையும் அல்லது செய்திட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதனை அடையாளங்காணும், வகுத்தமைக்கும் மற்றும் ஒருங்கிணைக்கும் நோக்கத்துக்காக இலங்கை றுஹுணு பொருளாதார அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தைத் தாபிப்பதற்கும் அத்துடன் அதனோடு தொடர்புபட்ட அல்லது அதன் இடைநோ்விளைவான கருமங்களுக்கும் ஏற்பாடுசெய்வதற்காக
“இலங்கை றுஹுணு பொருளாதார அபிவிருத்திக் கூட்டுத்தபானம்”
எனும் சட்டமூலத்தினை கௌரவ அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் அவர்கள் பிரேரித்தார்.
பாராளுமன்றச் சபை முதல்வர் கௌரவ லக்ஷ்மன் கிரிஎல்ல அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணைகளை சபை ஏற்றுக் கொண்டது-
(i) 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்கையின் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் பற்றி ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற விசேட குழு
2019 மே 22 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினால் நியமிக்கப்பட்ட, 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்கையின் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் பற்றி ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கு பாராளுமன்ற விசேட குழுவின் இறுதி அறிக்கையை முன்வைப்பதற்கு வழங்கப்பட்ட கால எல்லை பாராளுமன்றத்தின் 102 ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம் 2019 செப்தெம்பர் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்படுதல் வேண்டும்.
(ii) சட்டவாக்க நிலையியற் குழு
51(3)(ஆ) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், 2019 யூன் 27 ஆம் திகதி சபாநாயகாினால் சட்டவாக்க நிலையியற் குழுவிற்கு ஆற்றப்படுத்தப்பட்ட, “ஊவா மாகாண சபையின் சுற்றுலா அபிவிருத்திப் பிரிவு வரைவு நியதிச்சட்டம்” மீதான அறிக்கையை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்காக சட்டவாக்க நிலையியற் குழுவிற்கு வழங்கப்பட்ட கால எல்லை 2019 செப்தெம்பர் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்படுதல் வேண்டும்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
சபையினால் அங்கீகரிக்கப்பட்டன.
ஒத்திவைப்புப் பிரேரணை
“அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் அல்லது வாழ்க்கைச் செலவு கொடுப்பனவினை அதிகரித்தல்” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ காமினி லொக்குகே அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1753 மணியளவில் பாராளுமன்றமானது 2019 ஆகஸ்ட் 22ஆம் திகதி வியாழக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks