பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2017 ஆம் ஆண்டுக்கான மத்திய பொறியியல் உசாத்துணைப் பணியகத்தின் வருடாந்த அறிக்கை
(ii) 2018 ஆம் ஆண்டுக்கான வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iii) 2018 ஆம் ஆண்டுக்கான வெகுசன ஊடக அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iv) 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க, அத்தியாவசிய பொதுமக்கள் சேவை சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் பயணிகள் அல்லது பண்டங்களுக்கான அனைத்துப் பொதுப் போக்குவரத்துச் சேவைகளும் அத்தியாவசிய சேவைகள் என பிரகடனப்படுத்தல் தொடர்பில் அதிமேதகு சனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்டு, 2019 யூலை 27 ஆம் திகதிய 2133/65 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ மஹிந்த ராஜபக்ஷ
அரை அரச ஊழியர்களுக்கான அரச கொடுப்பனவு மற்றும் தனியார் மற்றும் தோட்டத்துறை ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு
மேற்சொன்ன வினாவிற்கு அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் கௌரவ கயந்த கருணாதிலக்க அவர்கள் பதிலளித்தார்.
(ii) கௌரவ டக்ளஸ் தேவானந்தா
மீனவர்களுக்கான பல நாள் மீன்பிடிக் கப்பல்கள்
தனிப்பட்ட விளக்கங்கள்
கௌரவ அர்ஜுன ரணதுங்க அவர்கள் அன்ஞலோ மெத்தியுஸ் தொடர்பாக கௌரவ திலங்க சுமதிபால அவர்கள் தன்மைப் பற்றி தெரிவித்த குற்றச்சாட்டு சம்பந்தமாக தனிப்பட்ட விளக்கமொன்றினை வழங்கினார்.
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
1971 ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்க, வணிகக் கப்பற்றொழில் சட்டத்தைத் திருத்துவதற்காக
“வணிகக் கப்பற்றொழில் (திருத்தம்)”
எனும் சட்டமூலத்தினை அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் கௌரவ கயந்த கருணாதிலக்க அவர்கள் பிரேரித்தார்.
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ பந்துல லால் பண்டாரிகொட அவர்களுக்கு “மரண தண்டனையை இல்லாதொழிக்கவும் அதனோடு தொடர்புடைய ஏற்பாடுகளை செய்வதற்குமானதொரு சட்டமூலம்” இனை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிலையியற் கட்டளை 52(6) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
அனுதாபப் பிரேரணைகள்
பின்வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைகள் மீது பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டன:-
(i) மறைந்த கௌரவ சேனராஜா சமரநாயக்க
(ii) மறைந்த கௌரவ அப்துல் ரசாக் மன்சூர்
(iii) மறைந்த கௌரவ வி.கே. இந்திக
அதனையடுத்து, 1519 மணியளவில் பாராளுமன்றமானது 2019 ஆகஸ்ட் 06ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks