பார்க்க

E   |   සි   |  

2019 ஜூலை 12ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ :  பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் விஷேட கூட்டம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2018 ஆம் ஆண்டுக்கான இலங்கைச் சுங்கத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ii)    2018 ஆம் ஆண்டுக்கான தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள் குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி, தொழில் முயற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சின் வாழ்க்கை தொழிற்பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி பிரிவின் செயலாற்றுகை அறிக்கையும் கணக்குகளும்

(iii)    2016 ஆம் ஆண்டுக்கான பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை

(iv)    2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க, துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ்,  துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீடு தொடர்பாக  நிதி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2019 மாச்சு 5 ஆம் திகதிய 2113/10 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(v)    1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, நீதித்துறைச் சட்டத்தின் 60 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும், சட்டத்தின்  61 ஆம் பிரிவின் கீழ், பிரதம நீதியரசரின் ஒருப்பாட்டுடன் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு  அமைச்சரினால்  ஆக்கப்பட்டு, 2019 மார்ச் 26 ஆம் திகதிய 2116/28 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதி


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ (திருமதி) சந்திராணி பண்டார       -      இரண்டு மனுக்கள்
(ii)    கௌரவ ரஞ்சித் அலுவிஹாரே

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


சிறப்புரிமைக் கேள்விகள்

(i)    கௌரவ ரொசான் ரணசிங்க

தன் மீதான மரண அச்சுறுத்தல் மற்றும் தாக்குதல் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு

(ii)    கௌரவ (திருமதி) ஹிருணிகா பிரேமச்சந்திர

சுயாதீன தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “ஹத்வெனி பெய” நிகழ்ச்சியுடனான தனது நேர்காணலை இரத்துச் செய்தல்


பாராளுமன்ற சபை முதல்வரினால் முன்மொழியப்பட்ட பின்வரும் பிரேரணைகளை சபை ஏற்றுக் கொண்டது,

(i)    எந்தவொரு சட்டத்தின் மூலமும் மரண தண்டனையை விதிப்பது தொடர்பாக குறிப்பிடப்பட்டிருப்பதனை இல்லாதொழிப்பதற்காக பாராளுமன்றத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ள “மரண தண்டனையை இல்லாதொழித்தல்” தனியார் உறுப்பினர் சட்டமூலத்தினை அரசாங்க வர்த்தமானியில் இன்றே பிரசுரிப்பதனை இயலச் செய்வதற்காக 52 மற்றும் 53 ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் இடைநிறுத்தப்படுமாக

(ii)    இலங்கையில் இன மற்றும் சமய சகவாழ்வை உறுதி செய்வதற்காக அது பற்றி ஆராய்ந்து தனது சிபாரிசுகளை பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற விசேட குழு

2018 செப்டம்பர் 07 ஆம் திகதி சபாநாயகர் அவர்களால் நியமிக்கப்பட்ட இலங்கையில் இன மற்றும் சமய சகவாழ்வை உறுதி செய்வதற்காக அது பற்றி ஆராய்ந்து தனது சிபாரிசுகளை பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற விசேட குழு, தன்னால் அவதானிக்கப்பட்ட விடயங்களை 2018 செப்டம்பர் 04 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட பிரேரணை மூலமாகப் பணிக்கப்பட்ட கால எல்லைக்குள் பாராளுமன்றத்தினால் இடைக்கால அறிக்கையின் மூலம் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் இறுதி அறிக்கையை முன்வைப்பதற்கு குறிப்பிட்ட விசேடகுழுவிற்குப் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள கால எல்லை பாராளுமன்றத்தின் 102 ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம் 2020 சனவரி 12 ஆம் திகதி வரை காலநீடிப்புச் செய்யப்படுமாக

(iii)    உயர் பதவிகள் பற்றிய குழு

124(1) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளினாலும் 2016 பெப்ரவரி 26 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையினாலும் தடைபெறாமல், 2019 யூலை 11 ஆம் திகதி தெரிவுக் குழுவினால் தீர்மானிக்கப்பட்டவாறு உயர் பதவிகள் பற்றிய குழுவானது தெரிவுக் குழுவினால் நியமிக்கப்படும் பதினேழு (17) பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக


ஒத்திவைப்புப் பிரேரணை

“சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு மீது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ (டாக்டர்) (திருமதி) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1618 மணியளவில் பாராளுமன்றமானது 2019 ஜூலை 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks