E   |   සි   |  

2019 மே 07ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ : விசேட குழுவொன்றை அமைத்தல்
‘B’ : வெகுசன ஊடக அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கடமையாற்றவுள்ள உறுப்பினர்கள்
‘C’ : அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்களில் கடமையாற்றவுள்ள உறுப்பினர்கள்
‘D’ : பாராளுமன்றத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் சம்பந்தமானது


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    20122013 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் ஆண்டறிக்கைகள்
(ii)    2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த  அறிக்கையும் கணக்குகளும்
(iii)    2016 ஆம் ஆண்டுக்கான முதியோருக்கான தேசிய சபையின் ஆண்டு அறிக்கை

(iv)    2018 ஆம் ஆண்டுக்கான நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் வருடாந்த செயற்திறன் அறிக்கை
(v)    2017 ஆம் ஆண்டுக்கான  பரீட்சைத்  திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை

(vi)    (40 ஆம் அத்தியாயமான) பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 12 ஆம்  பிரிவின் கீழ் சனாதிபதி அவர்களால் ஆக்கப்பட்டு, 2019 ஏப்பிறல் 22 ஆம் திகதிய 2120/4 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(vii)    (40 ஆம் அத்தியாயமான) பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின்  5 ஆம்  பிரிவின் கீழ் சனாதிபதி அவர்களால் ஆக்கப்பட்டு, 2019 ஏப்பிறல் 22 ஆம் திகதிய 2120/5 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(viii)    2017.06.06 முதல் 2017.12.08 வரையிலான காலப்பகுதிக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2019.02.21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முதலாவது அறிக்கையில்  புத்தசாசன மற்றும் வயம்ப அபிவிருத்தி அமைச்சு மற்றும் பௌத்த அலுவல்கள் திணைக்களம் தொடர்பில்  குறிப்பிடப்பட்ட  விடயங்கள் தொடர்பான 119(4) ஆம்  பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(ix)    2019 ஆம் ஆண்டின் 06 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2019.01.01 முதல் 2019.03.31 ஆம் திகதி வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் குறைநிரப்பு உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு
(x)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1) ஆம் பிரிவின் கீழ்   2007 ஒக்டோபர் 9 ஆம் திகதிய 1518/15 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளையின் அட்டவணையின் திருத்தம் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இந்துக் கற்கைகள் பீடமொன்றை தாபிப்பது தொடர்பில் நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி  அமைச்சரால் ஆக்கப்பட்டு,  2018 மார்ச் 18 ஆம் திகதிய 2115/5 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xi)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவின் கீழ்   அக்குவைனஸ் கொலேஜ் ஒவ் ஹயர் ஸ்ரடீஸ் நிறுவனத்தைப் ஆங்கிலத்தில் கௌரவ கல்வி இளமாணி பட்டமளிக்கும் நிறுவகமாக அங்கீகரித்து  நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு,  2019 மார்ச் 26 ஆம் திகதிய 2116/11 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xii)    2017.06.06 முதல் 2017.12.08 வரையிலான காலப்பகுதிக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2019.02.21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முதலாவது அறிக்கையில்  மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சு  தொடர்பில்  குறிப்பிடப்பட்ட  விடயங்கள் தொடர்பான 119(4) ஆம்  பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xiii)    2017.06.06 முதல் 2017.12.08 வரையிலான காலப்பகுதிக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2019.02.21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முதலாவது அறிக்கையில்  சிறைச்சாலைகள் திணைக்களம் தொடர்பில்  குறிப்பிடப்பட்ட  விடயங்கள் தொடர்பான 119(4) ஆம்  பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

கமத்தொழில் மற்றும் காணி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ விஜித ஹேரத் அவர்களுக்குப் பதிலாக கௌரவ சுசந்த புஞ்சிநிலமே அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா      -   இரண்டு மனுக்கள்
(ii)    கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி              -       நான்கு மனுக்கள்
(iii)    கௌரவ சந்திம கமகே                           
(iv)    கௌரவ ஹர்ஷண ராஜகருணா

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ டக்ளஸ் தேவானந்தா

பாடசாலைகள் மீள திறத்தல் மற்றும் அதன் பாதுகாப்பு

மேற்சொன்ன வினாவிற்கு கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்கள் பதிலளித்தார்.


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் மற்றும் பாதுகாப்பு நிலைமை தொடர்பான அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றொன்றினை  பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சருமான கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் முன்வைத்தார்.


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

பின்வரும் சட்டமூலங்களை பாராளுமன்றச் சபை முதல்வர் கௌரவ லக்ஷ்மன் கிரிஎல்ல அவர்கள் பிரேரித்தார்-

(i)    கம்பெனிகள் (திருத்தம்) - 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க, கம்பெனிகள் சட்டத்தைத் திருத்துவதற்காக
(ii)    இலங்கை காணி மீட்டல் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் (திருத்தம்) - 1968 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க, இலங்கை காணி மீட்டல் மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனச் சட்டத்தைத் திருத்துவதற்காக
(iii)    மோட்டார் வாகனம் (திருத்தம்) - (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தைத் திருத்துவதற்காக


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

தெங்கு அபிவிருத்தி (திருத்தச்) சட்டமூலம்

திருத்தங்களுடன் சபையினால் நிறைவேற்றப்பட்டது.


ஒத்திவைப்புப் பிரேரணை

“2019 ஏப்ரல் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற எதிர்பாரா பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் நாட்டின் தற்போதைய நிலைமை” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ எஸ்.எம். சந்திரசேன அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1859 மணியளவில் பாராளுமன்றமானது 2019 மே 08 ஆம் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks