பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பாராளுமன்றச் செயலாளர் நாயகம் பாராளுமன்றக் கூட்டத்தை ஒத்திவைத்தல் மற்றும் பாராளுமன்ற அமர்வைக் கூட்டுதல் பற்றிய மேன்மைதங்கிய சனாதிபதியினால் பிறப்பிக்கப்பட்ட பிரகடனங்களை வாசித்தார்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : “பயங்கரவாத எதிர்ப்பு” எனும் சட்டமூலம் சம்பந்தமான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு
‘B’ : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்
இன்றைய தினத்திற்கு நிலையியற் கட்டளைகள் இடைநிறுத்தப்பட வேண்டும் என கௌரவ எம்.ஏ. சுமந்திரம் மற்றும் கௌரவ விஜித ஹேரத் ஆகியோரால் முறையே முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்ட பிரேரணையை சபை ஏற்றுக் கொண்டது.
பிரதம அமைச்சராக கௌரவ மகிந்த ராஜபக்ஷ அவர்களை நியமிப்பதாக கூறியும் 2018 ஒக்டோபர் 26 ஆம் திகதி அல்லது அதற்குப் பின்னர் நியமித்த அரசாங்கத்தில் நம்பிக்கை இல்லை
கௌரவ அநுர திசாநாயக்க மற்றும் கௌரவ விஜித ஹேரத் ஆகியோரால் முறையே முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்ட பிரேரணையானது ‘ஆம்’, ‘இல்லை’ என்ற குரல்களிலிருந்து வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
அதனையடுத்து,1026 மணியளவில் பாராளுமன்றமானது 2018 நவம்பர் 15 ஆம் திகதி வியாழக்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks