E   |   සි   |  

2016 ஜூன் 22ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ செல்வம் அடைக்கலநாதன், குழுக்களின் பிரதித் தவிசாளர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2015 ஆம் ஆண்டுக்கான சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சு
(ii) 2015 ஆம் ஆண்டுக்கான அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களம்
(iii) 2015 ஆம் ஆண்டுக்கான முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம்
(iv) 2015 ஆம் ஆண்டுக்கான அஞ்சல் திணைக்களம்

ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்

(v) 2013 ஆம் ஆண்டுக்கான தேசிய கால்நடை வள அபிவிருத்திச் சபையின் வருடாந்த அறிக்கை


மனுக்களைச் சமர்ப்பித்தல்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-

(i) கௌரவ லஸந்த அலகியவன்ன       -          மூன்று மனுக்கள்
(ii) கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா -        இரண்டு மனுக்கள்
(iii) கௌரவ க. துரைரெட்ணசிங்கம்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


நிலையியற் கட்டளை 23(2)  இன் கீழான வினாக்கள்

கௌரவ அநுர திசாநாயக்க அவர்கள்

பனாமா கிராம மக்களை மீள்குடியமர்த்தல்


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தைத் தாபிப்பதற்கு ஏற்பாடுசெய்வதற்கும்; காணாமற்போன ஆட்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கு ஏற்பாடுசெய்வதற்கும்; காணாமற்போன ஆட்களின் உறவினர்களுக்கு உதவி வழங்குவதற்கும்; காணாமற்போன ஆட்கள் பற்றிய தரவுத்தளத்தை நிறுவுவதற்காகவும்; சொல்லப்பட்ட அலுவலகத்துக்கு குறித்தளிக்கப்பட்ட தத்துவங்களுக்கும் பணிகளுக்கும் ஏற்புடையற்பாலனவான நடவடிக்கை முறைகளையும் வழிகாட்டு நெறிகளையும் எடுத்துக்கூறுவதற்காகவும்; அத்துடன் இச்சட்டத்தின் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தலுடன் தொடர்புபட்ட அல்லது அதன் இடைநோ்விளைவான எல்லாக் கருமங்களுக்கும் ஏற்பாடு செய்வதற்காக

“காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (தாபித்தலும், நிருவகித்தலும், பணிகளை நிறைவேற்றுதலும்)”

எனும் சட்டமூலத்தினை உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் பாராளுமன்றச் சபை முதல்வருமான கெளரவ லக்ஷ்மன் கிரிஎல்ல அவர்கள் பிரேரித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

அரசியலமைப்பின் கீழ் பிரேரணை

விவாதிக்கப்பட்டதுடன், எதிர்வரும் தினமொன்றுக்கு ஒத்திவைக்கப்பட்டது.


அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றம் 2016 ஜூன் 23ஆந் திகதி வியாழக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks