E   |   සි   |  

2016 பெப்ரவரி 09ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


புதிய உறுப்பினர்களின்  உறுதிப்பிரமாணம் அல்லது சத்தியப்பிரமாணம்

கௌரவ எம்.கே.ஏ.டீ.எஸ். குணவர்தன அவர்களின் மரணம் காரணமாக ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக கெளரவ கார்திஹேவா சரத் சந்ரலால் பொன்சேகா அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக கெளரவ சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

பின்வரும் அறிவித்தல்கள் விடுக்கப்பட்டன-

‘A’ : “உள்ளூர் அதிகாரசபைகள் தோ்தல்கள் (திருத்தம்)” எனும் சட்டமூலம் சம்பந்தமான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு
‘B’ : உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதி கிடைக்கப் பெறல்
‘C’ : துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் சம்பந்தமான செயலமர்வு


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2014 ஆண்டுக்கான அநுராதபுர மாவட்டச் செயலகம்
(ii) 2014 ஆம் ஆண்டுக்கான நன்னடத்தை, சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம்

ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்

(iii) 2013 ஆம் ஆண்டுக்கான இலங்கை புடைவை மற்றும் ஆடை நிறுவகம்
(iv) 2013 ஆம் ஆண்டுக்கான தேசியப் பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவகம்

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்


மனுக்களைச் சமர்ப்பித்தல்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-

(i) கௌரவ ஹரின் பர்னாந்து
(ii) கௌரவ அசோக் அபேசிங்க
(iii) கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன  - 2 மனுக்கள்
(iv) கௌரவ வாசுதேவ நாணாயக்கார  - 2 மனுக்கள்
(v) கௌரவ ரோஹித அபேகுணவர்தன  - 3 மனுக்கள்
(vi) கௌரவ கே.கே. பியதாஸ
(vii) கௌரவ ஆனந்த அலுத்கமகே
(viii) கௌரவ நாலக்க பிரசாத் கொலொன்னே
(ix) கௌரவ முஜிபுர் ரஹுமான்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


நிலையியற் கட்டளை 23(2)  இன் கீழான வினாக்கள்

கௌரவ அநுர திசாநாயக்க அவர்கள்

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான பிரச்சினை


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

உள்ளூர் அதிகாரசபைகள் தோ்தல்கள் (திருத்தச்) சட்டமூலம்

சபையால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.


அதனையடுத்து, 1505 மணியளவில் பாராளுமன்றம் 2016 பெப்ரவரி 10ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks