பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ சந்திம வீரக்கொடி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகர் பத்திரங்களைச் சமர்ப்பித்தல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம்,
• 2011 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் XI ஆம் பகுதி; மற்றும்
• 2012 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் VII ஆம் பகுதி, நான்காவது தொகுதியின் IX ஆம் பகுதி, ஐந்தாவது தொகுதியின் IV மற்றும் V ஆம் பகுதிகள் மற்றும் ஆறாவது தொகுதியின் X, XI மற்றும் XII ஆகிய பகுதிகள்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2012 ஆம் ஆண்டுக்கான சனாதிபதி நிதியம் பற்றிய கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை
(ii) 2012 ஆம் ஆண்டுக்கான வீதிப் பராமரிப்பு நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தின் வருடாந்த அறிக்கை
(iii) 2013 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 7(2) ஆம் பிரிவின் கீழ், நீதி மற்றும் தொழில் உறவுகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு 2015 பெப்புருவரி மாதம் 02 ஆம் திகதிய 1900/3 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டளை
மனுக்களைச் சமர்ப்பித்தல்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினரால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-
கௌரவ கருப்பையா வேலாயுதம் - பதினைந்து மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ நிமல் சிறிபால த சில்வா அவர்கள்
2015 வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கான உத்தேச சம்பளச் சலுகைகள் தொடர்பானது
(ii) கௌரவ அநுர திசாநாயக்க அவர்கள்
‘மெரிடைய்ம்’ பாதுகாப்பு நிறுவனங்களின் பணிபுரியும் பணியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பானது
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகாரசபை (திருத்தச்) சட்டமூலம்
சபையினால் திருத்தங்களுடன் அங்கீகரிக்கப்பட்டது.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“குமார் குணரட்னம் மற்றும் ஏனையோரது உரிமைகளை பாதுகாத்து அரசியலில் ஈடுபட வசதியளித்தல்” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ அஜித் குமார அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 2010 மணியளவில் பாராளுமன்றம் 2015 மார்ச் 03ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks