பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2006-09-27
2006 ஆம் ஆண்டு நவராத்திரி காலத்தில், இலட்சுமி தேவியின் அருள் வேண்டி சபாநாயகரின் இல்லத்தில் இலட்சுமி பூசையொன்று இடம்பெற்றது. இந்து சமயக் கோட்பாடுகளின்படி இலட்சுமி தேவியே செல்வ போகத்தை அருள்பவள்.
மேற்குறிப்பிட்ட இந்நிகழ்வு, செப்டெம்பர் மாதம் 27ஆம் திகதியன்று மாலை, கௌரவ சபாநாயகர் W.J.M. லொக்குபண்டார, கௌரவ பிரதிச் சபாநாயகர், கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஆகியோரால், இந்து சமய, கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினதும், பாராளுமன்றச் செயலாளர் நாயத்தின் பணியாளர்களினதும் உதவியோடு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இக்கண்கவர் பூசை, கொழும்பு 6, மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் பிரதம குருக்களினால் நடத்தப்பட்டது. நாதஸ்வரம், தவில் மேளக் கச்சேரியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பூசையினால் உருவாக்கப்பட்ட தெய்வீக சூழலுக்குப் பொருத்தமாக பரத நாட்டிய கலை நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து சிங்களப் பாரம்பரிய இசை நிகழ்ச்சியும் அரங்கேறின.
சிறப்பு அழைப்பினர்கள், வேறு பல அதிகாரிகள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks