E   |   සි   |  

2006-10-17

இப்தார் கொண்டாட்டம் 2006

றமழான் மாதத்தில், தினமும் நோன்பை முடிக்கும் மாலைப் போசனமான இப்தார் வைபவம் கௌரவ. சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் 17 ஒக்டோபர் 2006 அன்று நடைபெற்றது. அன்றைய தினம் மாலை நேரம் 5:30 இற்கு ஆரம்பமான இந்த விசேட நிகழ்விற்கு, சபாநாயகரின் அழைப்பின் பேரில், மேதகு ஜனாதிபதி அவர்கள், பிரதம அமைச்சர் அவர்கள், அமைச்சரவை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் தலைவர்கள், பிற சமயத் தலைவர்கள், பல இராஜதந்திரிகள் என்போர் வருகை தந்திருந்தனர். சென்ற ஆண்டைப் போலவே, இம்முறையும் இந்த நிகழ்வு அரபியன் றோயல் கூட்டு நிறுவனங்களின் தவிசாளரான திரு. M.B.M. ஹம்சா JP அவர்களின் அநுசரணையுடன் இடம்பெற்றது. இவ்வைபவத்திற்கான ஏற்பாடுகள், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், கௌரவ ரவூப் ஹக்கிம் அவர்களின் பாராளுமன்ற இணைப்புச் செயலாளர் திரு. திரு. ஹசன் அல் (f)பாசி ஷெரிப் அவர்களினால் மேற்கொள்ளப்பட்டன.

இஸ்லாமியக் கலண்டரின் படி, ஒன்பதாவது மாதமான றமழான் மாதமானது, இஸ்லாமிய வருடத்தில், மிகவும் போற்றப்படுகின்ற, ஆசீர்வதிக்கப்பட்ட, ஆன்மாவிற்கு நன்மை அளிக்கின்ற ஒரு மாதமாகக் கருதப்படுகிறது. உலகெங்கும் பரந்திருக்கும் முஸ்லிம்களின் புனிதமான, பண்டிகைக் காலமான இம்மாதத்தில், நோன்பிருப்பது மட்டுமமின்றி தொழுகையும், ஈகையும் கூட வலியுறுத்தப்படுகின்றன. ஒவ்வோர் ஆண்டும் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில், தற்போதைய சபாநாயகர் கௌரவ W.J.M. லொக்குபண்டார அவர்களின் முன்முயற்சியினால் நடைபெறும் இப்புனித நிகழ்வானது, நாட்டில் சமய மற்றும் தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்துவதில் முழுக்கவனம் செலுத்துகிறது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks